கடத்தப்பட்ட பிரித்தானிய கோடீஸ்வர தொழிலதிபர் கண்டுபிடிப்பு
கடத்தப்பட்டதாக கூறப்படும் பிரித்தானிய கோடீஸ்வர தொழிலதிபரை ஈக்வடோர் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
கொலின் ஆம்ஸ்ட்ரோங் என்ற 78 வயதான தொழிலதிபரே கடத்தப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டவராவர்.
இவர் முன்னாள் இராஜதந்திரி என தெரிவிக்கப்படுகிறது.
ஈக்வடோரில் அவருக்கு சொந்தமான பண்ணையில் இருந்த போதே
ஈக்வடோரில் அவருக்கு சொந்தமான பண்ணையில் இருந்த போதே இந்த கடத்தல் நடந்துள்ளது.
URGENTE 🚨
En la vía a #Manabí, nuestras unidades LIBERARON al ciudadano Collin A., secuestrado días anteriores en #LosRíos. Al momento se encuentra sano y salvo.
📍Existen 9 aprehendidos
Noticia en desarrollo…#SinTreguaAlDelito pic.twitter.com/esaIjP0ZVa
— GraD. César Augusto Zapata Correa (@CmdtPoliciaEc) December 20, 2023
காவல்துறை உடையணிந்த 15 பேர் கொண்ட குழுவினால் இந்த கடத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பில் 09 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காதலியிடம் காவல்துறையினர் விசாரணை
இதற்கிடையில், கடத்தலுக்கு திட்டமிட்டதாக சந்தேகிக்கப்படும் அவரது காதலியிடம் காவல்துறையினர் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், கடத்தல் சம்பவம் பதிவாகியதையடுத்து, அவரது காதலி தோட்டத்தில் வெடிகுண்டுகள் அணிந்திருந்த நிலையில் காணப்பட்டார்.
அப்போது, வெடிகுண்டு செயலிழக்கும் பிரிவு அவரது வெடிகுண்டு அங்கியை அகற்றும் காணொளியையும் வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.