மோசடியாக சிம் கார்ட் பெற்றால் 3 ஆண்டுகள் சிறை
தொலைத்தொடர்பு சாதனங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க, விண்ணப்பதாரரின் பயோமெட்ரிக் விவரங்களை கட்டாயம் சரிபார்த்த பின்னரே, அவருக்குத் தொலைத்தாடர்பு நிறுவனங்கள் சிம் கார்ட் வழங்க வேண்டும். ஆள்மாறாட்டம், மோசடி மூலமாக தொலைத்தாடர்பு சாதனங்கள் அல்லது சிம் கார்டுகள் பெறப்பட்டால் 3 ஆண்டுகள் வரை சிறை அல்லது ரூ.50 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மசோதா மீதான விவாதம் மக்களவையில் புதன்கிழமை நடைபெற்றது. பெரும்பாலான எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதால், அவர்களால் விவாதத்தில் பங்கேற்க முடியவில்லை. பிஜுஜனதா தள எம்.பி. பர்த்ருஹரி மஹதாப், பாஜக எம்.பி. ஜெயந்த் சின்ஹா, சிவசேனை எம்.பி. ஸ்ரீரங் அப்பா பர்னே உள்ளிட்டோடர் விவாதத்தில் பங்கேற்றனர்.
இதைத்தாடர்ந்து விவாதத்துக்குப் பதிலளித்து மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:
இந்த மசோதா தொலைத்தாடர்பு துறையில் அமைப்பு ரீதியான சீர்திருத்தங்களை ஊக்குவிக்கும். 138 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்திய தந்தி சட்டம் உள்பட 2 சட்டங்களை இந்த மசோதா ரத்து செய்யும். மேலும் இணையவழி பாதுகாப்பு பிரச்னைகளை கையாள்வதற்கான சட்ட அமைப்பு முறையையும் மசோதா வலுவாக்கும் என்றார். இதையடுத்து குரல் வாக்ùகடுப்பு மூலம் மசோதா நிறைúவற்றப்பட்டது.