;
Athirady Tamil News

அமெரிக்க வரலாற்றிலேயே அதிக ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த நிரபராதி! 71 வயதில் விடுதலை

0

அமெரிக்காவில் கொலை குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட நபர், 48 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த நிலையில் நிரபராதி என விடுவிக்கப்பட்டார்.

ஆயுள் தண்டனை
கடந்த 1974ஆம் ஆண்டு Edmond எனும் மதுபான விடுதியில் Carolyn Sue Rogers என்ற நபர் கொல்லப்பட்டார்.

இதுதொடர்பில் 1975ஆம் ஆண்டு கிளன் சிம்மன்ஸ் (Glynn Simmons) மற்றும் டான் ராபர்ட்ஸ் ஆகிய இருவர் கொலை குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.

அவர்களுக்கு ஆரம்பத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் 1977யில் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

71 வயதில் விடுதலை

இந்த நிலையில் கடந்த சூலை மாதம் இந்த வழக்கு மறுவிசாரணைக்கு வந்தது. அதில் சிம்மன்ஸ் குற்றமற்றவர் என தீர்ப்பு அளிக்கப்பட்டது.

இதனால் கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவித்த சிம்மன்ஸ் 71 வயதில் விடுதலையானார்.

இதன்மூலம் அமெரிக்க நீதிமன்ற வரலாற்றிலேயே குற்றச்செயலில் இருந்து விடுபட்டவர்களின் தேசிய பட்டியலில் மிக நீண்டகாலம் சிறைவாசம் அனுபவித்த நபரானார் சிம்மன்ஸ்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.