நாடு முழுவதிலும் 600 போலி சாரதி பயிற்சி நிலையங்கள்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நாடு முழுவதிலும் சுமார் 600 போலி சாரதி பயிற்சி நிலையங்கள் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் இயங்கி வரும் 1200 சாரதி பயிற்சி நிலையங்களில் 600 போலியானவை என தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்யப்படாது இந்த பயிற்சி நிலையங்கள் இயங்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அனுமதி
இவ்வாறு போலியாக இயங்கி வரும் போலி சாரதி பயிற்சி நிலையங்கள் தொடர்பில் மாவட்ட மோட்டார் போக்குவரத்து பரிசோதகர்களுக்கு தெரியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அனுமதியுடன் இயங்கி வரும் பயிற்சி நிலையங்களின் எண்ணிக்கை 600 எனத் தெரிவிக்கப்படுகின்றது.
அனுமதி பெற்றுக்கொண்ட பயிற்சி நிலையங்களின் பயிற்றுவிப்பாளர்களுக்கு பரீட்சை நடத்தப்படுவதாகவும், பயிற்சி வழங்கப்படுவதாகவும் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.