ஈரானுக்கு ஏற்பட்ட பேரிழப்பு : முக்கிய படைத்தளபதியை கொன்றது இஸ்ரேல்
ஈரானிய புரட்சிகரக் காவலர்களின் தளபதியான சையத் ராஸி மௌசவி, சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் திங்கள்கிழமை படுகொலை செய்யப்பட்டதாக ஈரான் தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சிரிய தலைநகரில் இஸ்ரேல் நடத்திய விமான தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜெனரல் காசிம் சுலைமானியின் நெருங்கிய சகா
அமெரிக்க ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் காசிம் சுலைமானியின் நெருங்கிய சகா இவர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் அதிக விலையை செலுத்தும் என ஈரான் தெரிவித்துள்ளது.
ஈரான் கடும் கண்டனம்
ஈரானிய வெளியுறவு அமைச்சகம் திங்கள்கிழமை மாலை ஒரு அறிக்கையை வெளியிட்டது, மௌசவியின் படுகொலைக்கு “தகுந்த நேரத்தில் உரிய இடத்தில் பதிலளிக்க தெஹ்ரானுக்கு உரிமை உள்ளது” என்று எச்சரித்தது.
#عاجل | قصـ ـف “إسرائيلي” استهدف منطقة الأهداف في محيط #دمشق على طريق مطار دمشق في #سوريا pic.twitter.com/DZ3ve1Qonx
— قناة القدس (@livequds) December 25, 2023
இந்த படுகொலை ” கோழைத்தனமான செயல் மற்றும் சியோனிச ஆட்சியின் பயங்கரவாதத் தன்மையின் அடையாளம்” என்று தெஹ்ரான் மேலும் தெரிவித்துள்ளது.