திருப்பதிக்கு பக்தர்கள் வர வேண்டாம் – தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு!
டிக்கெட்கள் இல்லாத பக்தர்கள் தரிசனத்திற்கு வர வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைகுண்ட ஏகாதசி
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசி மற்றும் சொர்க்கவாசல் திறப்பை ஒட்டி பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. மேலும், பள்ளி விடுமுறை தினங்கள் என்பதால் ஏராளமானோர் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
இதனால், பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும் நிலை காணப்படுகிறது. தொடர்ந்து, ஜனவரி ஒன்றாம் தேதி வரை சொர்க்கவாசல் பிரவேசம் செய்ய பக்தர்களுக்கு வழங்கப்படும் இலவச தரிசன டோக்கன்கள் மற்றும் 300 ரூபாய் தரிசன டிக்கெட்கள் விற்றுத்தீர்ந்துவிட்டன.
தேவஸ்தானம் அறிவிப்பு
எனவே, ஜனவரி 1ம் தேதி வரை தரிசன டிக்கெட் இல்லாத பக்தர்கள் திருப்பதிக்கு வரவேண்டாம் என்று தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.
இருப்பினும் திருமலைக்கு அனுமதிக்கப்படும் கோயில் வெளியே கோபுர தரிசனம், மொட்டையடிப்பது, திருமலையில் வராக சுவாமி உள்ளிட்ட இதர சன்னதிகளில் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்களின் பயணத்தை திட்டமிட்டுக்கொள்ளும்படியும் தெரிவித்துள்ளது.