தரமற்ற மருந்து இறக்குமதியின் பிரதான சூழ்ச்சியாளர்கள் மூவர்: வெளியான சர்ச்சைக்குரிய தகவல்
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, மேலதிக செயலாளர் டொக்டர் ரத்நாயக்க மற்றும் மருந்து ஒழுங்குமுறை அதிகார சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆகியோர் தரமற்ற நுண்ணுயிர் எதிர்ப்பி இறக்குமதியின் பின்னணியில் பிரதானமாக செயற்பட்டவர்கள் என அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் டொக்டர் ருக்ஷான் பெல்லான தெரிவித்துள்ளார்.
அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு டொக்டர் ருக்ஷான் பெல்லான, குற்றப்புலனாய்வு விசாரணைக்கும் அழைக்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்குமூலம்
அதன்படி அவர், முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, மேலதிக செயலாளர் டொக்டர் ரத்நாயக்க மற்றும் மருந்து ஒழுங்குமுறை அதிகாரசபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆகியோர் தரமற்ற நுண்ணுயிர் எதிர்ப்பி இறக்குமதியில் பிரதானமாக செயற்பட்டவர்கள் என தெரிவித்துள்ளார்.
அதேவேளை, கடந்த 26 ஆம் திகதி இலங்கை குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் இல்லத்திற்குச் சென்று அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.
உறுதியான ஆதாரங்கள்
இந்நிலையில், தரமற்ற மருந்து இறக்குமதி செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக உறுதியான ஆதாரங்கள் இருந்தால் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கைது செய்யப்படுவார் என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் அண்மையில் தெரிவித்திருந்தார்.