தனது தாயார் திருமதி.பூமலர் லிங்கம் அவர்களின் எழுபதாவது பிறந்ததினத்தை முன்னிட்டு விசேட உணவு வழங்கிய கலாநிதி சஞ்ஜி லிங்கம் குடும்பம்.. (படங்கள் வீடியோ)
தனது தாயார் திருமதி.பூமலர் லிங்கம் அவர்களின் எழுபதாவது பிறந்ததினத்தை முன்னிட்டு விசேட உணவு வழங்கிய கலாநிதி சஞ்ஜி லிங்கம் குடும்பம்.. (படங்கள் வீடியோ)
சமூக உதவி மற்றும் கல்விக்கு உதவுதலில் தன்னார்வம் கொண்ட புங்குடுதீவு இறுப்பிட்டியில் பிறந்து சுவிஸில் வதியும் திருமதி. பூமலர் பஞ்சரத்னலிங்கம் அவர்களின் எழுபதாவது பிறந்ததினத்தை முன்னிட்டு அவரது மகனும், சுவிஸ் புங்குடுதீவு ஒன்றிய உபதலைவருமான “கலாநிதி” திரு.சஞ்ஜி லிங்கம் குடும்பத்தின் முழுமையான நிதிப் பங்களிப்பில் இன்றையதினம் புங்குடுதீவு பெத்தப்பா கோயிலில் வைத்து விசேட உணவு வழங்கிக் கொண்டாடினார்.
ஏற்கனவே கடந்த பத்து தினங்களுக்கு முன்னர், புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின் சார்பில் அதன் உபதலைவர் சஞ்சி லிங்கம் அவர்களின் தாயாரின் எழுபதாவது பிறந்தநாளை முன்னிட்டு வழங்கிய முழுமையான நிதிப் பங்களிப்பில் புங்குடுதீவு அம்பலவாணர் அரங்கில்
வைத்து சிற்றுண்டிகள், மதிய உணவு, மத்திய கல்லூரி நடனமாணவிகளுக்கான நடன உடுப்புக்கான செலவு, கல்வி சாதாரணதர, மற்றும் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் சந்தனமாலை, மெடல் மற்றும் பணமுடிப்பு வழங்கிக் கௌரவிப்பு போன்றவை நடைபெற்றது நீங்கள் அறிந்ததே.
இதனைத் தொடர்ந்து, இன்றைய நாளில் பிறந்தநாளைக் கொண்டாடும் திருமதி.பூமலர் பஞ்சரத்னலிங்கம் அவர்களின் எழுபதாவது பிறந்தநாளை முன்னிட்டு அப்பிரதேச சிறுவர்,சிறுமியர் பெற்றோர்கள், பொதுமக்களென பெருமளவிலான மக்கள் ஆர்வமாக கலந்து கொண்டு மிகவும் மகிழ்ச்சியுடன் பிறந்தநாள் பாட்டுப் பாடி கேக் வெட்டி ஒருவருக்கொருவர் ஊட்டி மகிழ்ந்து தத்தமது சந்தோசத்தையும், மகிழ்ச்சினையும் திருமதி. பூமலர் பஞ்சரத்னலிங்கம் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்தினையும் தெரிவித்தனர். அத்துடன் கலந்து கொண்ட அனைவருக்கும் சிற்றுண்டிகளும் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் அதிதியாகக் கலந்து கொண்ட புங்குடுதீவு மண்ணின் மைந்தரும், முன்னாள் அதிபருமான சமாதான நீதவான் திரு.எஸ்.கே.சண்முகலிங்கம் உரையாற்றும் போது, “இதனை சுவிஸ் ஒன்றிய உபதலைவர் தம்பி சஞ்சி லிங்கம் அவரது தாயாரின் பிறந்ததினத்தை முன்னிட்டு இந்நிகழ்வை நடத்துவது வரவேற்கக் கூடியதே.
சுவிஸ் ஒன்றிய உபதலைவர் தம்பி சஞ்சி லிங்கம் ஊருக்காகவும், ஊர் மக்களுக்காகவும் பல்வேறு உதவிகளை செய்பவர் மட்டுமல்ல, அண்மையில்தான் சுவிஸ் நாட்டில் தொழில்கல்வியில் கலாநிதி பட்டம் பெற்றவர், அவரைப் போன்று இங்குள்ள மாணவச் செல்வங்களும் பல்கலைக் கழகம் சென்று கலாநிதிகளாக வர வேண்டுமென வாழ்த்துகிறேன். இதேவேளை திருமதி பூமலர் பஞ்சரத்னலிங்கம் அவர்களுக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.,
அதேபோல் வாழ்த்துரையாற்றிய பெத்தப்பா கோயில் பிரதமகுரு அவர்கள், தமது வாழ்த்துரையில் “இன்று பிறந்தநாள் கொண்டாடும் திருமதி.பூமலர் பஞ்சாசரத்னலிங்கம் அவர்கள் பல்லாண்டு காலம் நீடூழி நோய், நொடியின்றி சகல செல்வங்களுடனும் வாழ வாழ்த்துவதுடன் இன்றைய விசேட அன்னதான நிகழ்வுக்கு முழுமையான நிதிப் பங்களிப்பு வழங்கிய தம்பி சஞ்சி லிங்கம் அவரது தாயாரின் பிறந்ததினத்தை முன்னிட்டு வழங்கியமைக்கு நன்றி எனவும் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, இன்றையதினம் புங்குடுதீவு பெத்தப்பா கோயிலில் திருமதி. பூமலர் பஞ்சரத்னலிங்கம் அவர்கள் சகல செல்வங்களுடனும் நீண்ட காலம் நோய்நொடியின்றி வாழ வேண்டுமென வாழ்த்தி படையல் வைத்து கடவுளிடம் பிரார்த்தித்து மக்களினால் வாழ்த்தப்பட்டார்.
பின்னர் தேவார பாராயணத்துடன் திருமதி. பூமலர் பஞ்சரத்னலிங்கம் அவர்கள் சகல செல்வங்களுடனும் நீண்ட காலம் நோய்நொடியின்றி வாழ விசேட பூசையுடன் வாழ்த்துத் தெரிவிக்கப்பட்டதுடன், வடை, கொலுக்கட்டை மற்றும் பல்வேறு கறி வகைகளுடன் விசேட அன்னதானம் கலந்து கொண்ட அனைத்து மக்களுக்கும் வழங்கப்பட்டது. நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டமையினால் கோயில் அன்னதான மண்டப சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு மூன்றுமுறையாக அன்னதான நிகழ்வு நடைபெற்றது.
இதேவேளை நன்றியுரையாற்றிய தலைவர் “சுவிஸ் ஒன்றிய உபதலைவர் தம்பி சஞ்சி லிங்கம் ஊருக்காகவும், ஊர் மக்களுக்காகவும் பல்வேறு உதவிகளை செய்பவர் மட்டுமல்ல, அண்மையில்தான் சுவிஸ் நாட்டில் தொழில்கல்வியில் கலாநிதி பட்டம் பெற்றவர், அவரைப் போன்று இங்குள்ள அனைவரும் பல்கலைக் கழகம் சென்று கலாநிதிகளாக வர வேண்டுமென வாழ்த்துகிறேன். இதேவேளை திருமதி பூமலர் பஞ்சரத்னலிங்கம் அவர்களுக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.,
இன்றையதினம் நடைபெற்ற இந்நிகழ்வுக்கான முழுமையான நிதிப் பங்களிப்பை திரு.சன்ஜி லிங்கம் குடும்பத்தினர் வழங்கி இருந்தனர். சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின் உபதலைவரும், அண்மையில் தொழிற்கல்வியில் சுவிஸில் கலாநிதி பட்டம் பெற்றவருமான திரு. சன்ஜி லிங்கம், இறுப்பிட்டியில் பிறந்து சுவிஸில் வதியும் தனது தாயாரின் எழுபதாவது பிறந்ததினத்தை முன்னிட்டு இதனை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறாக காலத்தின் தேவை கருதி உடனடியாக இந்த உதவியினை செய்ய முன் வந்த திரு. சன்ஜி லிங்கம் குடும்பத்தினருக்கு, புங்குடுதீவு மக்கள் மற்றும் தாயகத்தின் உறவுகளுடன் இணைந்து, மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் நன்றி கூறுவதோடு
இன்றைய நாளில் இனிய எழுபதாவது பிறந்தநாளைக் கொண்டாடும் திருமதி.பூமலர் பஞ்சரத்னலிங்கம் அவர்கள் தேக ஆரோக்கியத்துடன், நீடூழி காலம் வாழ வேண்டுமென” என தாயக உறவுகளோடு, இணைந்து மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் வாயார வாழ்த்தி பெருமை கொள்கிறது..
நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. என்றும்
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.
29.12.2023
தனது தாயார் திருமதி.பூமலர் லிங்கம் அவர்களின் எழுபதாவது பிறந்ததினத்தை முன்னிட்டு விசேட உணவு வழங்கிய கலாநிதி சஞ்ஜி லிங்கம் குடும்பம்.. (வீடியோ)
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1
§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்.. https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos