மண்வெட்டியால் தம்பியை அடித்துக் கொன்ற அண்ணன்
கல்னாவ காவல்துறை பிரிவிற்குட்பட்ட புல்னாவ, ஹிரிபிட்டியாவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் தோட்டத்தில் சகோதரர்கள் இருவருக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதமானது எல்லை மீறிய நிலையில் தம்பியாரை அண்ணன் மண்வெட்டியால் அடித்து கொன்றுள்ளார்.
அவுகன, சிறிமாகம பிரதேசத்தில் வசிக்கும் மூன்று பிள்ளைகளின் தந்தையான 46 வயதான டபிள்யூ. லலித் சந்திரகுமார என்பவரே கொல்லப்பட்டவர் ஆவார்.
சிறிலங்கா கடற்படையில் பணியாற்றிய
சிறிலங்கா கடற்படையில் பணியாற்றிய அவர், விபத்தில் சிக்கி முற்றிலும் ஊனமுற்ற நிலையில் ஓய்வு பெற்றார்.
இரவு 8.30 மணியளவில் சகோதரர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, மூத்த சகோதரர் பின்னால் வந்து மண்வெட்டியின் பக்கவாட்டால் தம்பியின் தலையில் தாக்கியுள்ளார்.
சம்பவத்தை நேரில் பார்த்த அவர்களின் தாயார், தரையில் விழுந்த இளைய சகோதரர் மீண்டும் மண்வெட்டியால் தாக்கப்பட்டதாக தெரிவித்தார்.
தமக்கு மூன்று பிள்ளைகள் இருப்பதாகவும், இரண்டாவது பிள்ளை திருமணமாகாதவர் என்றும், அவருடன் வீட்டில் வசித்து வருவதாகவும், இளைய மகன் இரண்டாவது மகனால் கொல்லப்பட்டதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.
கொலையை செய்த சந்தேகநபர் தப்பிச் செல்லும் போது கைது செய்யப்பட்டதாக கல்னாவ காவல்துறையினர் தெரிவித்தனர்.