நாட்டில் 1000 ரூபாக அதிகரித்துள்ள பச்சை மிளகாயின் விலை!
சந்தையில் தற்போது சில மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக நுகர்வோர் குற்றம் சுமத்தி வரும் நிலையில் தம்புள்ளை நகரில் ஒரு கிலோகிராம் பச்சை மிளகாய் 1000 ரூபாவுக்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ பச்சை மிளகாய் மொத்த விலையில் 1300 முதல் 1500 ரூபாய் வரையிலும், சில்லறை சந்தையில் ஒரு கிலோ பச்சை மிளகாய் 1800 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.
அந்த வகையில் 100 கிராம் பச்சை மிளகாயில் சுமார் 12 காய்கள் உள்ளதாகவும், அதன்படி ஒரு காய் பச்சை மிளகாயின் விலை 15 ரூபாய் என்றும் மக்கள் கூறுகின்றனர்.