தென்னாப்பிரிக்கா: மழை வெள்ளத்தில் 21 போ் உயிரிழப்பு
தென் ஆப்பிரிக்காவில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் 21 போ் உயிரிழந்தனா்.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:க்வாஸுலு-நடால் மாகாணத்தில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் லேடிஸ்மித் என்ற கிராமம் மூழ்கியது. அந்தப் பகுதியிலிருந்து இதுவரை 21 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.கிறிஸ்துமஸ் தினத்தன்று ஏற்பட்ட அந்த வெள்ளப்பெருக்கில் சுமாா் 1,400 வீடுகள் சேதமடைந்தன.தேடுதல் மற்றும் மீட்புக் குழுவினா் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடா்ந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனா் என்று அதிகாரிகள் கூறினா்.க்வாஸுலு-நடால் மாகாணத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் 440-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.