மாத்தறையில் துப்பாக்கிச்சூடு: பொலிஸ் அதிகாரி பலி
மாத்தறை, வெலிகம-பெலன பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் பொலிஸ் அதிகாரியொருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த துப்பாக்கிச்சூடு இன்று (31.12.2023) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அடையாளம் தெரியாத நபரொருவரினால் இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பொலிஸார் விசாரணை
இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.