நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் புனித தீர்த்தம்: வீட்டிலேயே தயாரிக்கலாம்
கோவில்களில் தரப்படும் புனித தீர்த்தங்கள் பல மூலிகை பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படுவதாகும்.
இதனை குடிப்பதால் நம் உடலில் இருக்கும் பல நோய்களில் இருந்து விடுபடலாம். மேலும் உடலை புத்துணர்ச்சியாக்கவும் இது பயன்படுகிறது.
இந்த புனித தீர்த்தத்தை வீட்டிலேயே எப்படி தயாரிக்கலாம் என்றும் இதனால் கிடைக்கும் பலன்களை பற்றியும் விரிவாக பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
ஏலக்காய்
கருவாப் பட்டை
வால் மிளகு
ஜாதி பத்திரி
பச்சைக் கற்பூரம்
செய்முறை
ஏலக்காய், கருவாப் பட்டை, வால் மிளகு, ஜாதி பத்திரி இவற்றை சம அளவில் எடுத்துக்கொள்ளவும்.
பின் இதை வெயிலில் நன்கு உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொள்ளவும்.
அடுத்து பச்சை கற்பூரத்தை இடித்து பொடியாக்கி இதனுடன் கலந்துகொள்ளவும்.
புனித தீர்த்தம் தயாரிக்க ஒரு தாமிர கோப்பையில் தண்ணீர் ஊற்றி இந்த பொடி சேர்த்து கலந்து இரவு முழுவதும் பூஜை அறையில் வைத்துவிட வேண்டும்.
மறுநாள் காலையில் எழுந்து குளித்து முடித்ததும், வெறும் வயிற்றில் பூஜை முடிந்த உடன், இந்த புனித தீர்த்தத்தை அருந்த வேண்டும்.
கிடைக்கும் பலன்கள்
சிவனை வழிபடுபவர்கள் இதனுடன் வில்வ இலை சேர்த்து அருந்தலாம். பெருமாளை வழிபடுபவர்கள் இதனுடன் துளசி இலை சேர்த்து அருந்தலாம்.
இந்த புனித தீர்த்தத்தை அருந்திய பிறகு இதயம், இரைப்பை வலிமை அடையும். கண்களைப் பற்றிய கோளாறு நீங்கும். நரம்பு தளர்ச்சி, சளி தொல்லை, சுவாசக் கோளாறு ஆகியவை நீங்கும். குருதி சுத்தமடையும்.
பித்தத்துடன் தொடர்புடைய குறைபாடுகள், வாந்தி, தலைசுற்றல், மயக்கம், வாய் கசப்பு, வயிற்று வலி, நெஞ்சக வலி போன்றவை நீங்கும்.
மேலும் இந்த மருந்து சஞ்சீவி முறையிலான மருந்தாகும். இதனை தொடர்ந்து அருந்தும் போது உடல் ஆரோக்கியம் மேம்படும்.