தென்கொரியாவில் சுனாமி : ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கமென தெரிவிப்பு!
ஜப்பானில் இன்று பாரிய நிலநடுக்கங்கள் பதிவானதை தொடர்ந்து, தென் கொரியாவின் கிழக்கு கடற்கரையை ஒரு மீட்டருக்கும் குறைவான சுனாமி ஆழிப்பேரலை தாக்கியு ள்ளது.
இதன்படி, 09:21 மணியளவில் 1.5 அடி உயரத்தில் குறித்த சுனாமி ஏற்பட்டதாக தென் கொரியாவின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், அடுத்த சில மணி நேரங்களில் மேலும் பெரிய சுனாமி அலைகள் எழ வாய்ப்புள்ளதாக அந்த மையம் எச்சரித்துள்ளது.
ஜப்பானில் நிலநடுக்கம்
ஜப்பானில் இன்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினை தொடர்ந்து ரஷ்யா, வட கொரியா மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.
அத்துடன், பொது மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயறுமாறும் அறிவுறுத்தப்பட்டிருந்தன.
சுனாமி
இந்த நிலையில், தென் கொரியாவின் கிழக்கு கடற்கரையை இன்று சுனாமி தாக்கியிருந்ததோடு, கரையை அடைந்த முதல் சுனாமி அலை 67 சென்டிமீட்டர் அளவில் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலை மேலும் தீவிரமடையக்கூடுமெனவும், அடுத்த 24 மணி நேரத்திற்கு மேலாக இந்த சுனாமி நிலை நீடிக்கும் என தென் கொரியாவின் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
அத்துடன், வடகொரியாவில் 2 மீட்டருக்கும் உயரமான சுனாமி அலைகள் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மக்களுக்கான அறிவுறுத்தல்
இந்த ஆபத்தான நிலையில், தென் கொரியாவின் கிழக்கு கடற்கரை மாகாணத்தில் வசிப்பவர்கள் கடற்கரையிலிருந்து தூர பிரதேசங்களுக்கு செல்லுமாறு அவசர அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.