நீரில் தத்தளித்த மாணவியை காப்பாற்ற குதித்த இளம்பெண்கள்..இருவர் உயிரிழந்த பரிதாபம்
தமிழக மாவட்டம் தூத்துக்குடியில் கண்மாயில் குளிக்க சென்ற இளம்பெண்கள் இருவர், நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கண்மாயில் குளிக்க சென்ற பெண்கள்
தூத்துக்குடி மாவட்டம் மேல மருதூர் கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி மேனகா. இவர் 9ஆம் வகுப்பு படித்து வந்த இவர், கல்லூரி மாணவி கனிச்செல்வி மற்றும் இளம் பெண் கலைச்செல்வி ஆகியோருடன் கண்மாயில் குளிக்க சென்றார்.
அங்கு மேனகா குளிக்கும்போது நீரில் மூழ்கி தத்தளித்ததாக கூறப்படுகிறது. அதனைப் பார்த்து பெண்கள் இருவரும் மேனகாவை காப்பாற்ற நீரில் இறங்கியுள்ளனர்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக மாணவியை அவர்களால் காப்பாற்ற முடியவில்லை. அத்துடன் கலைச்செல்வியும் அவருடன் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
காப்பாற்றும் முயற்சியில் மரணம்
இதனை கவனித்த அக்கம்பக்கத்தினர் ஒருவழியாக கனிச்செல்வியை காப்பற்றினர். மேலும் பொலிஸார் தகவல் அளித்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் உயிரிழந்த பெண்களின் உடல்களைக் கைப்பற்றி, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவியை காப்பாற்றும் முயற்சியில் பெண்ணொருவர் அவருடன் சேர்ந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.