பாலஸ்தீனத்தில் கொத்து கொத்தாக கொன்று குவிக்கப்படும் மாணவர்கள்!
காசா மீதான இஸ்ரேலின் படையெடுப்பை அடுத்து நடத்தப்பட்டுவரும் தாக்குதல்களில் 4119 பாலஸ்தீன மாணவர்கள் கொல்லப்பட்டதுடன் 7536 பேர் காயமடைந்துள்ளதாக பாலஸ்தீன கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன் 221 ஆசிரியர்கள் மற்றும் கல்வி ஊழியர்கள் கொல்லப்பட்டதுடன் 703 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று என்று பாலஸ்தீன கல்வி அமைச்சகத்தை மேற்கோள்காட்டி அதிகாரபூர்வ பாலஸ்தீனிய செய்தி நிறுவனமான WAFA தெரிவித்துள்ளது.
மேற்கு கரையில் மட்டும்
காசாவில் 343 பாடசாலைகள் இஸ்ரேலிய விமான தாக்குதலில் சேதமடைந்துள்ளதாகவும் மேற்குகரையில் மட்டும் 38 பாடசாலைகள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஒக்டோபர் 07 ற்கு பின்னரான தாக்குதல்களில் மேற்கு கரையில் 37 மாணவர்கள் கொல்லப்பட்டதுடன் 282 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
22 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் படுகொலை
குடியிருப்பு கட்டடங்கள், பாடசாலைகள், மருத்துவமனைகள், மசூதிகள் மற்றும் தேவாலயங்கள் போன்றவற்றை இஸ்ரேல் குறிவைத்து அதன் வான்வழி குண்டுவீச்சில் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது.
காசாவின் சுகாதார அமைச்சின் தகவலின்படி, 22,185 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதுடன் 57,053 பேர் காயமடைந்துள்ளனர். பாலஸ்தீனிய மற்றும் சர்வதேச மதிப்பீடுகள் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று கூறுகின்றன.