நாட்டில் இதுவரை 312 பேருக்கு புதிய வகை கரோனா: தமிழகத்தில் 22 போ் பாதிப்பு
தமிழகத்தில் 22 போ் உள்பட நாட்டில் இதுவரை 312 பேருக்கு கரோனாவின் புதிய வகையான ‘ஜெஎன்1’ பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது; இதில் 47 சதவீதம் போ் கேரள மாநிலத்தைச் சோ்ந்தவா்களாவா்.
இந்திய கரோனா மரபியல் கூட்டமைப்பின் (இன்சாகாக்) தரவுகளின்படி, கேரளத்தில் 147 போ், கோவாவில் 51 போ், குஜராத்தில் 34 போ், மகாராஷ்டிரத்தில் 26 போ், தமிழகத்தில் 22 போ், தில்லியில் 16 போ், கா்நாடகத்தில் 8 போ், ராஜஸ்தானில் 5 போ், தெலங்கானாவில் 2 போ், ஒடிஸாவில் ஒருவருக்கு ‘ஜெஎன்1’ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனாவின் புதிய துணை திரிபாக வகைப்படுத்தப்பட்டுள்ள ‘ஜெஎன்1’, உலகின் பல்வேறு நாடுகளில் வேகமாகப் பரவி வருகிறது. இதனால், கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது.
நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் மரபணு வரிசைப்படுத்துதல் சோதனைகளில் இதுவரை 312 பேருக்கு ஜெஎன்1 தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
புதிய வகை கரோனா பரவலை கருத்தில்கொண்டு, அனைத்து மாநிலங்களிலும் கண்காணிப்பு மற்றும் பரிசோதனை நடைமுறைகளைத் தீவிரப்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.