புத்தாண்டில் தொடங்கப்பட்ட புதிய விமானசேவை
ரஷ்யாவின் மொஸ்கோவிற்கும் இலங்கையின் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கும் இடையிலான நான்காவது விமான சேவை ஜனவரி 1, 2024 முதல் ஆரம்பமாகியுள்ளது.
“ரோசியா ஏர்லைன்ஸ்” என்ற விமான நிறுவனமே இந்த புதிய சேவையை ஆரம்பித்துள்ளது. இந்த புதிய விமானசேவைக்கு போயிங்-777 விமானங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
ரஷ்ய தலைநகருக்கும் கட்டுநாயக்காவிற்கும்
ரஷ்யாவின் மொஸ்கோவிற்கும் இலங்கையின் கட்டுநாயக்காவிற்கும் இடையே வாரத்தில் 4 நாட்கள் ஒரு குறிப்பிட்ட அட்டவணையின்படி விமானசேவைகள் நடத்தப்படவுள்ளன.
நான்காவது விமானசேவை
இதற்கான வெளிநாட்டு விமானச் செயற்பாட்டுச் சான்றிதழை, இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளர் நாயகமும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான பி.ஏ.ஜெயகாந்த , கட்டுநாயக்க சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையில், ரோசியா விமான நிறுவனத்தின் திட்டமிடல் மற்றும் செயற்பாடுகளின் தலைவர் நிகிதா டோல்கோவ் இடம் 12/29 அன்று வழங்கினார்.
Aroflot, Azur Air, Red Wings மற்றும் Rossiya Airline ஆகியவை ரஷ்யாவிற்கும் இலங்கைக்கும் இடையே விமானங்களை இயக்குகின்றன.