வரி நடைமுறையைப் பின்பற்றாதவர்களுக்கு அறவிடப்படும் தண்டப்பணம்
வரி இலக்கத்தை பெற்றுக்கொள்ளும் நடைமுறையை பின்பற்றாதவர்களிடம் இருந்து 50,000 ரூபா தண்டப்பணம் அறவிடுவதற்கு சட்ட ஏற்பாடு உள்ள போதிலும், அது தற்போதைக்கு நடைமுறைப்படுத்தப்படாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
மேலும், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் வரி எண் பெறுவதை கட்டாயமாக்க அரசு நடவடிக்கை எடுத்திருந்தது.
வரிக் கோப்பைத் திறந்து எண்ணைப் பெறுவது கட்டாயம் என்றாலும், அந்த மக்கள் அனைவரும் வரி செலுத்த வேண்டும் என்று அர்த்தமல்ல, தற்போது, மாதத்திற்கு 100,000 ரூபாய்க்கு மேல் நிகர வருமானம் உள்ளவர்கள் மட்டுமே வரி செலுத்த வேண்டும் என்றுத் தெரிவித்துள்ளார்.