ஈரான் குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு ஐஎஸ் இயக்கம் பொறுப்பேற்பு
புதிய இணைப்பு
ஈரானில் நடத்தப்பட்ட இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு ஐ.எஸ் அமைப்பு (இஸ்லாமிய அரசு அமைப்பு) உரிமை கோரியுள்ளது.
அமெரிக்க உளவு மாஸ்டர் என அழைக்கப்படும் காசிம் சுலைமானி கொல்லப்பட்டதன் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் ஈரானில் மக்கள் மீது வெடிகுண்டுத் தாக்குதலை நடத்தியதாக குறித்த அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
தெற்கு ஈரானில் உள்ள கெர்மான் நகரில் நடந்த தாக்குதலில் 84 பேர் கொல்லப்பட்டதோடு பலர் காயமடைந்தனர்.
இறுதி அறிக்கை
எனினும் ஈரான் இறுதியாக வெளியிட்ட அறிக்கையில் இறந்தவர்களின் எண்ணிக்கை 95 ஆக அதிகரித்து காணப்பட்டது.
இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் அமெரிக்காவும் இஸ்ரேலும் இருந்திருக்க வேண்டும் என்று ஈரான் முதலில் கூறியது.
எனினும், டெலிகிராம் பதிவின் மூலம் தாக்குதலுக்கான உரிமையை ஐ.எஸ் அமைப்பு கோரியுள்ளது.
மேலும், ஐ.எஸ் அமைப்பின் செய்தி நிறுவனமான Amaq இல் முகமூடி அணிந்த இரண்டு நபர்களைக் காட்டும் ஒரு படத்தை வெளியிட்டதோடு, அவர்களே தாக்குதல்களுக்கு காரணம் என்றும் கூறியுள்ளது.
முதலாம் இணைப்பு
ஈரானில் கடந்த புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட இரட்டைக் குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவே காரணம் என ஈரான் குற்றம் சுமத்தியுள்ளது.
எந்த ஒரு அமைப்புகளும் குறித்த தாக்குதலை பொறுப்பேற்காத நிலையில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்க வேண்டும் என ஈரான் ஜனாதிபதியின் அரசியல் ஆலோசகர் மொஹம்மட் ஜம்ஷிதி குற்றம் சாட்டியுள்ளார்.
ஈரானில் நடந்த இரட்டை குண்டிவெடிப்புத் தாக்குதலில் 84 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஈரானின் உள்துறையமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஹமாஸின் தளபதி கொலை
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போரில் ஹமாஸின் இரண்டாம் நிலைத் தளபதி லெபனானில் கொல்லப்பட்டிருக்கும் நிலையில் இந்தத் தாக்குதல் நடைபெற்றிருந்தது.
மேலும், கடந்த டிசம்பரில் இஸ்ரேலுடன் தொடர்புடைய ஐந்து உளவாளிகளை ஈரான் தூக்கிலிட்டதாகத் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இஸ்ரேல் மட்டுமல்லாமல், ஈரான் பல்வேறு இஸ்லாமிய போராட்டக் குழுக்களையும் எதிரிகளாகக் கொண்டுள்ளது.
பல நாடுகள் கண்டனம்
அந்த குழுக்களால் ஈரானில் பல தாக்குதல்களும் நடத்தப்பட்டுள்ளது. இது இஸ்லாமிய குடியரசின் எதிரிளால் நடத்தப்பட்ட தாக்குதல் என இஸ்ரேல் அறிவித்திருந்தது.
எவ்வாறாயினும், தகுந்த பதிலடி இதற்கு கொடுக்கப்படும்” என்றார்.
சவூதி அரேபியா, சிரியா, ஈராக், அமீரகம், மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் இந்தத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.
1978ற்குப் பிறது ஈரானில் நடந்த பயங்கரமான தாக்குதல் இது எனக் கூறப்படுகிறது.