யாழ் பல்கலை மாணவர்களுடன் ரணிலின் கலந்துரையாடல்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையேயான கலந்துரையாடல் ஒன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளது.
வடமாகாணத்திற்கு நான்கு நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ள அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடன் நேற்று வெள்ளிக்கிழமை(05) மாலை யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.
பிரச்சினைகள்
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஸ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் சிரேஸ்ட பேராசிரியர் சிவக்கொழுந்து சிறீசற்குணராஜா, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளும் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.
இதன்போது மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக அதிபருக்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறைபாடுகள்
மாணவர்களின் விடுதிகளில் உள்ள குறைபாடு, முகாமைத்துவ பீடத்திற்கான பேருந்து வசதிகளை ஏற்படுத்தல், சித்த மருத்துவ துறையை பீடமாக தரமுயர்த்தல் இணைந்த சுகாதார விஞ்ஞான பீட மாணவர்களுக்கான உள்ளக பயிற்சி வழங்குதல் போன்ற விடயங்கள் இதன்போது மாணவர்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பீடங்களில் இருந்தும் தெரிவு செய்யப்பட்ட 37 மாணவர்கள் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றுள்ளனர்.