தேயிலைக்கான உர கொள்வனவுக்கு வட்டியில்லா கடன் திட்டம்
தேயிலைக்கான உரத்தை கொள்வனவு செய்வதற்கு வட்டியில்லா கடனை வழங்க விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு திட்டமிட்டுள்ளது.
கடந்த காலங்களில் உரப்பற்றாக்குறை காரணமாக தேயிலை அறுவடையில் ஏற்பட்ட பாதிப்பை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அதன் செயலாளர் ஜானக தர்மகீர்த்தி தெரிவித்துள்ளார்.
தேயிலை நிதியில் இருந்து தேவையான நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்படும்.
கடந்த ஆண்டு தேயிலை அறுவடை 260 மில்லியன் கிலோ கிராமாக காணப்பட்டது.
இது கடந்த ஆண்டை விட சுமார் 40 மில்லியன் கிலோ கிராம் குறைவாகும்.
உரிய முறையில் உரமிடுவதன் மூலம் அடுத்த 06 மாதங்களுக்குள் தேயிலை விளைச்சலை 90 மில்லியன் கிலோ கிராமாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.