சீமெந்து விலை அதிகரிப்பு : தேசிய கட்டுமானத் தொழிலாளர் சங்கம் கண்டனம்
50 கிலோ கிராம் எடைக்கொண்ட சீமெந்து மூடை ஒன்றின் விலை 150 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, தேசிய சீமெந்து உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இதற்கமைய, 50 கிலோ கிராம் எடைக்கொண்ட சீமெந்து மூடை ஒன்றின் விலை 2,450 ரூபாவாக அதிகரிக்கப்பட்டது.
முன்னதாக 50 கிலோ கிராம் எடைக்கொண்ட சீமெந்து மூடை ஒன்று 2,300 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கட்டுமானத் துறை
இந்தநிலையில், சீமெந்து விலை அதிகரித்தமையினால் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளதாக தேசிய கட்டுமானத் தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் சுபுன் அபேசேகர தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதார சிக்கலுக்கு மத்தியில், கட்டுமானத் துறை ஓரளவு வளர்ச்சி அடையத் தொடங்கிய வேளையில், மீண்டும் சீமெந்தின் விலை அதிகரிக்கப்பட்டமையானது மோசமான பாதிப்பை ஏற்படுத்துகிறது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.