இலங்கையில் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய அரிசி ஆலையை நிறுவுகிறது சீனா
அங்குனகொலபலஸ்ஸ ஜந்துர பிரதேசத்தில் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய அரிசி ஆலையை நிர்மாணிக்க சீனாவின் ஹைனான் மாகாண அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
அரிசி உற்பத்தியில் பெரும் ஏகபோகம் இருப்பதாகவும், அந்த ஏகபோகத்தில் இருக்கும் ஒருசில அரிசி ஆலை உரிமையாளர்களால்தான் அரிசியின் விலை நிர்ணயம் செய்யப்படுவதாகவும் விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர கூறினார்.
அரசாங்கம் தனியாக நடத்த முடியாது
சீன அரிசி பதப்படுத்தும் நிலையத்தை அரசாங்கம் தனியாக நடத்த முடியாது என்பதால் ஜந்துரா மற்றும் குருவல இளைஞர்களை பயன்படுத்தி கூட்டுறவு வேலை ஏற்பாட்டினை தயார் செய்யவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
நாடு முழுவதும் விநியோகம்
முழு தென் மாகாணத்திலும் உற்பத்தி செய்யப்படும் நெல்லை சீன அரிசி ஆலை மூலம் அரிசியாக மாற்றி நாடு முழுவதும் விநியோகிக்க முடியும் என அமைச்சர் தெரிவித்தார்.