ஹமாஸ் அமைப்புடன் பேச்சு நடத்துவது கடினம் : கைவிரித்தது கத்தார்
லெபனானில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் துணைத்தலைவர் கொல்லப்பட்ட நிலையில் பிணைக்கைதிகளை விடுவிப்பது தொடர்பில் அந்த அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவது கடினம் என கத்தார் அரசாங்கம் அறிவித்துள்ளது .
கத்தார் பிரதமர் மொஹமத் பின் அப்துல்ரஹ்மான் அல் தனி (Mohammed bin Abdulrahman Al Thani), நேற்று தலைநகர் தோஹாவில் ஹமாஸ் அமைப்பினர் வசம் உள்ள பணய கைதிகளின் குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
துன்பத்தை புரிந்து கொண்டுள்ளோம்
அவர்களிடம், “பணய கைதிகளின் குடும்பத்தினரின் துன்பத்தை புரிந்து கொண்டுள்ளோம். ஆனால், பெய்ரூட் நகர தாக்குதலுக்கு பிறகு ஹமாஸ் அமைப்பினருடன் பேச்சு வார்த்தை நடத்துவது கடினமாக உள்ளது” என அல் தனி தெரிவித்தார்.