முச்சக்கர வண்டியில் ஏறிய பெண் : சினிமா பாணியில் செய்த அதிர்ச்சி செயல்
இரத்தினபுரி – கொடகவெல பகுதியில் பயணம் செய்ய வேண்டும் என கூறி முச்சக்கர வண்டியில் ஏறிய பெண் சாரதியை கொலை செய்துவிட்டு முச்சக்கர வண்டியை கொள்ளையடிக்க முயற்சித்துள்ளார்.
முச்சக்கரவண்டி சாரதியின் கழுத்தில் துணியால் கட்டி அழுத்தியதுடன், முகத்தை மூடிக்கொண்டு கொள்ளையடிக்க முயன்ற குற்றச்சாட்டில் குறித்த பெண் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொடகவெல நகரில் இருந்து முச்சக்கரவண்டியில் ஏறிக்கொண்ட யுவதி, கொடகவெல ரன்வல வீதியில் இரண்டு கிலோமீற்றர் பயணித்த போது முச்சக்கரவண்டி சாரதியின் பின் இருக்கையில் இருந்து முன் இருக்கை வரை கழுத்தில் துணியால் அழுத்தப்பட்டதாக சாரதி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
முச்சக்கரவண்டி கொள்ளை
அப்போது முச்சக்கரவண்டியை கட்டுப்படுத்த முடியாமல் வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் முச்சக்கரவண்டி வீதியை விட்டு விலகி நின்றுள்ளது.
அங்கு வந்த கிராம மக்கள் சந்தேகமடைந்த பெண்ணை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
காயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி கொடகவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸார் விசாரணை
சந்தேக நபரான பெண் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொடகவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.