;
Athirady Tamil News

‘நம்பிக்கை இழந்துவிட்டேன்’ சிறையில் சாவதே மேல் – நீதிபதியிடம் கதறிய ஜெட் ஏர்வேஸ் நிறுவனர்!

0

பணமோசடி வழக்கில் சிறையில் இருக்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல், உயிரோடிருப்பதை விட இறப்பதே மேல் என நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.

மோசடி வழக்கு
ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ரூ.848.86 கோடி கடனில், ரூ.538.62 கோடி மோசடி செய்யப்பட்டிருப்பதாக கனரா வங்கி புகார் அளித்தது.

இந்த மோசடி வழக்கில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலை (71 வயது) கடந்த ஆண்டு அமலாக்கத்துறை கைது செய்தது. தற்போது மும்பை சிறையில் நீதிமன்றக் காவலில் இருக்கும் நரேஷ் கோயல், ஜாமீன் கோரி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணையின் போது விசாரணையின்போது கூப்பிய கரங்களுடன், உடல் நடுங்கியபடி நரேஷ் கோயல் பேசியிருப்பதாவது “எனது உடல்நிலை மிகவும் மோசமாக இருக்கிறது. அதோடு, என் மனைவி படுத்த படுக்கையாக இருக்கிறார். என்னுடைய மக்களுக்கும் உடல்நிலை சரியில்லை. என் முட்டியில் வீக்கமும், அதனால் மடக்க முடியாத அளவுக்கு வலியும் இருக்கிறது.

இறப்பதே மேல்
மேலும், சிறுநீர் கழிக்கும்போதும் மிகவும் வலி ஏற்படுகிறது. தற்போதைய சூழ்நிலையில் வாழ்வின் அனைத்து நம்பிக்கைகளையும் நான் இழந்துவிட்டேன்.

இனி உயிரோடிருப்பதை விட சிறையில் இறப்பதே மேல். எனவே, என்னை மருத்துவமனைக்கு அனுப்புவதற்குப் பதில், சிறையில் இறப்பதற்கு அனுமதிக்க வேண்டும். எனக்கு 75 வயதாகிவிட்டது. எதிர்காலத்துக்கான எந்த நம்பிக்கையும் இல்லை. இனி சிறையில் இறப்பதே நல்லது. விதி என்னைக் காப்பாற்றும்” என்று தெரிவித்திருக்கிறார்.

இதைக்கேட்ட நீதிபதி மனம் மற்றும் உடல்நலம் பாதுகாக்கப்படும். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு அவரது வழக்கறிஞர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், நரேஷ் கோயிலின் ஜாமீன் மனு மீது அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல்செய்திருக்கும் நிலையில், இந்த வழக்கின் விசாரணை ஜனவரி 16-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.