வாடகைத்தாய் முறைக்கு தடை : பாப்பரசர் பிரான்சிஸின் கோரிக்கை
உலகம் முழுவதும் தற்போது அதிகளவில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் வாடகைத் தாய் முறைக்கு தடை விதிக்கப்பட வேண்டுமென பாப்பரசர் பிரான்சிஸ் வலியுறுத்தியுள்ளார்.
உலக அமைதிக்கும் மனிதர்களின் கண்ணியத்துக்கும் ஆபத்து விளைவிக்கும் நிகழ்வுகள் குறித்து கருத்து வெளியிடும் போதே, அவர் இதனை கூறியுள்ளார்.
அத்துடன், வாடகைத்தாய் என்பது இழிவான முறை எனவும் அவர் விமர்சித்துள்ளார்.
வாடகைத்தாய் முறை
அமைதிக்குப் பாதிப்பு ஏற்படுத்தும், அதனை பலவீனப்படுத்தும் மற்றும் சில இடங்களில் அதனை இல்லாமலே ஆக்கும் நேரத்தில் 2024 ஆம் ஆண்டு பிறந்துள்ளதாக பாப்பரசர் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, வாடகைத்தாய் முறை மூலம் பெறுகிற தாய்மை என்பது இழிவானது என அவர் கூறியுள்ளார்.
பெண் மற்றும் அந்தக் குழந்தையின் கண்ணியத்தின் மீதான வன்முறை இது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குழந்தை எனும் பரிசு
குழந்தை என்பது ஒரு பரிசு எனவும் அதனை, வணிக ஒப்பந்தத்தின் அடிப்படையில் பெற்றுக் கொள்ள முடியாது எனவும் பாப்பரசர் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், ‘கருப்பையை வாடகைக்கு விடும்’ நிகழ்வு எனக் குறிப்பிட்டு இதற்கு முன்னரும் வாடகைத்தாய் முறைக்கு அவர் எதிர்ப்பு வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.