;
Athirady Tamil News

விஜயகாந்த் மரணத்திற்கு காரணம் இதுவா? எஸ்.ஏ.சந்திரசேகர் சந்தேகம்

0

விஜயகாந்திற்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டதா என்பதில் எனக்கு சந்தேகம் இருக்கிறது என பிரபல இயக்குநர் மற்றும் நடிகர் விஜய்யின் தந்தையான எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

எஸ்.ஏ.சந்திரசேகர் இரங்கல்
நடிகரும், தேமுதிக கட்சி தலைவருமான கேப்டன் விஜயகாந்த் கடந்த 28ஆம் திகதி உடல்நலக்குறைவால் காலமானார். விஜயகாந்த் மறைவு திரையுலகினரை மட்டுமல்லாமல் தமிழக மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.

விஜயகாந்த் மறைவை ஒட்டி அவரது மிக நெருங்கிய நண்பரும், வெற்றி இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் துபாயில் இருந்ததால் இரங்கல் செய்தியை அங்கிருந்தபடியே வீடியோ வாயிலாக பகிர்ந்துகொண்டார்.

இதையடுத்து சமீபத்தில் சென்னை திரும்பிய எஸ்.ஏ.சந்திரசேகர் விஜயகாந்த் சமாதிக்கு நேரில் சென்று மரியாதை செலுத்தியதுடன் விஜயகாந்த் பற்றிய நினைவுகளையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அதில் “எனக்கும் விஜயகாந்த்துக்குமான உறவு என்பது சாதாரணமானதல்ல. ஒரு நடிகருக்கும் இயக்குநருக்கும் இடையே உள்ள உறவைத் தாண்டியது. என்னுடைய தம்பியாகத்தான் நான் அவரை உபசரித்திருக்கிறேன்.

இன்றைய காலத்துக்கு ஏற்ற மாதிரி சொல்லவேண்டும் என்றால் ஒரு நண்பனாக அவரை நான் நேசித்திருக்கிறேன். என்னை அவர் குரு என்ற உயர்ந்த இடத்தில் வைத்து இருந்தார், என்னை மட்டும் தான் அவர் குரு ஸ்தானத்தில் வைத்து இருந்தார், அவர் வேறு யாரையும் அப்படி சொல்லி பார்த்தது இல்லை.

கடந்த 2 வருடங்களுக்கு முன் விஜயகாந்தை அவரது அவரது வீட்டில் சந்தித்தேன். அப்போது கஷ்டப்பட்டு எழ முயற்சி செய்த அவரை நான் குனிந்து கட்டியணைத்து கொண்டேன்.

விஜயகாந்த் அரசியலில் மிகப்பெரிய இடத்திற்கு செல்வார் என்று நான் கணக்கு போட்டேன், 3வது தேர்தலில் வரும் போது அவர் முதல்வராகிவிடுவார் என்று நம்பினேன் என தெரிவித்துள்ளார்.

எஸ்.ஏ.சந்திரசேகர் சந்தேகம்
2016ம் ஆண்டு என நினைக்கிறேன், மிகப்பெரிய அறுவை சிகிச்சை ஒன்று அவருக்கு நடைபெற்று முடிந்தது, அதற்கு பிறகு போஸ்ட் ஆப்ரேஷன் கேர் என்ற ஒன்றுள்ளது.

ஒரு திரைப்படம் ஒரு படம் நன்றாக வரவேண்டும் என்றால், அதற்கு போஸ்ட் புரடெக்‌ஷன், ப்ரீ புரடெக்‌ஷன் இந்த இரண்டும்தான் முக்கியம். இவற்றின் மூலம்தான் ஒரு படம் நன்றாகவரும். ஷுடிங் செய்வதால் ஒரு படம் நன்றாக வந்துவிடாது? படப்பிடில் என்ன தப்பி நடந்தாலும் போஸ்ட் புரடெக்‌ஷனில் தான் சரி செய்வோம்.

அதுபோல்தான் வாழ்க்கையும். ஆகவே ஆபரேஷனுக்குப் பிறகு அவரது சிகிச்சை முறையாக இருந்ததா என எனக்குத் தெரியவில்லை. ஏனென்றால், அவ்வளவு எளிதாக தளர்ந்துவிடும் உடம்பு அல்ல விஜயகாந்தின் உடல்.

நெருக்கமானவர்களை அடிக்கடி சந்தித்து வந்திருந்தாலே அவர் இன்னும் பல காலம் வாழ்ந்திருப்பார். அதை நினைக்கும் போது மனம் ஏற்க மறுக்கிறது, மனம் அடித்துக் கொள்கிறது என எஸ்.ஏ.சந்திரசேகர் பேசியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.