;
Athirady Tamil News

கோதுமை மா விலையில் மாற்றம் ஏற்படாது : முக்கிய நிறுவனங்கள் அறிவிப்பு

0

கோதுமை மாவுக்கான விலையினை அதிகரிக்கப்போவதில்லை என இலங்கையின் மாவு தேவைகளைப் பூர்த்தி செய்யும் முக்கிய நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.

நாட்டிற்கான கோதுமை மாவு தேவைகளை தீர்க்கும் இரண்டு முக்கிய நிறுவனங்களான செரென்டிப் மா மில்ஸ் (பிரைவேட்) லிமிடெட் மற்றும் ப்ரிமா சிலோன் (பிரைவேட்) லிமிடெட் ஆகிய நிறுவனங்களே இந்த விடயத்தை தெரிவித்துள்ளன.

அவர்களிடம் ஆறு மாதங்களுக்குப் போதுமான கோதுமை தானியங்கள் காணப்படுவதால், விலை நிர்ணயங்கள் இல்லாமல் விலை ஸ்திரத்தன்மையை உறுதி செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

செங்கடலில் பதற்றம்
கோதுமை தானியங்களை உள்நாட்டில் அரைக்க கோதுமையை இறக்குமதி செய்யும் இரண்டு முக்கிய விநியோகத்தர்களான இவர்கள் கோதுமை மாவு இறக்குமதியாளர்களை அடுத்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்,

செங்கடலில் பதற்றம் நிலவுவதால் காரணமாக கப்பல் கட்டணங்களுக்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உருவாகியிருப்பதால், இறக்குமதியாளர்கள் விலைகளை அதிகரிக்க நிர்பந்திக்கப்படுவார்கள் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

எவ்வாறாயினும், உள்ளூர் சந்தையின் விநியோகத்தின் பெரும்பகுதிக்கு பொறுப்பான இந்த இரு நிறுவனங்களும் சமீபத்திய நெருக்கடியின் போது கூட போதுமான கோதுமை தானியங்கள் மற்றும் கோதுமை மாவு ஆகியவற்றைக் கொண்டிருப்பதன் மூலம் நாட்டின் உணவுப் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

செங்கடலில் நிலவும் பதட்டங்களால் உலகளாவிய கப்பல் பாதைகளில் ஏற்படும் அண்மைய இடையூறுகளின் விளைவாக சரக்குக் கட்டணங்கள் என்பன அதிகரிக்கப்படவுள்ளது.

விலைகளில் மாற்றம்
இருந்த போதிலும் இந்த இரண்டு நிறுவனங்கள் அனைத்து இலங்கையர்களுக்கும் கோதுமை மாவுகளில் உணவு பாதுகாப்பு மற்றும் விலை ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த விரும்புகின்றன.

அதனால், அந்த நிறுவனங்களின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட வெளிப்புற காரணிகள் விலை நிர்ணயத்தில் செல்வாக்கு செலுத்த்துகின்ற போதிலும் இலங்கைக்கு பிரதான உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய குறித்த நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.

எனவே, கோதுமை மாவின் விலைகளில் மாற்றம் ஏற்படாது என அந்த நிறுவனங்கள் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.