முதன்முறையாக கொழும்பை வந்தடைந்த பிரபல நாட்டின் கடற்படைக் கப்பல்!
கொழும்பு துறைமுகத்திற்கு முதன்முறையாக இந்திய கடற்படைக் கப்பலான (INS) கப்ரா வருகை தந்துள்ளது.
இன்றைய தினம் (09-01-2024) வருகை தந்த கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர்.
INS கப்ரா என்பது 50 மீட்டர் நீளமுள்ள வாட்டர் ஜெட் ஃபாஸ்ட் அட்டாக் கிராஃப்ட் (WJFAC) ஆகும், இது 55 பேர் கொண்ட பணியாளர்களைக் கொண்டுள்ளது.
குறித்த கப்பலுக்கு லெப்டினன்ட் கமாண்டர் அஜித் மோகன் தலைமை தாங்குகிறார்.
இந்த வருகையின் போது, லெப்டினன்ட் கமாண்டர் மேற்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் மேற்கு கடற்படைத் தளபதி மற்றும் தன்னார்வ கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் சமன் பெரேராவை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், கப்பல் கொழும்பில் தங்கியிருக்கும் போது, அதன் பணியாளர்கள் நாட்டின் சில சுற்றுலாத் தலங்களுக்குச் செல்வார்கள் என எதிர்பார்க்கபடுகின்றது.
பயணத்தை முடித்துக்கொண்டு INS கப்ரா ஜனவரி 10ம் திகதி தீவை விட்டு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.