சுவிஸ் “செல்வி.இனயாவின்” பிறந்தநாளை முன்னிட்டு “கல்விக்கு கரம் கொடுப்போம்” நிகழ்வு.. (படங்கள், வீடியோ)
சுவிஸ் “செல்வி.இனயாவின்” பிறந்தநாளை முன்னிட்டு “கல்விக்கு கரம் கொடுப்போம்” நிகழ்வு.. (படங்கள், வீடியோ)
##############################
புங்குடுதீவு, வவுனியா ஆகிய பிரதேசங்களைப் பூர்வீகமாக் கொண்டவர்களும் சுவிஸில் பிறந்து சுவிஸில் தூண் பிரதேசத்தில் வாழும் பிரசன்னா மற்றும் திவா என அன்புடன் அழைக்கப்படும் திரு.திருமதி. பிரசன்னா திவாநந்தி தம்பதிகளின் செல்வப் புதல்வி செல்வி.இனயா அவர்களின் முதலாவது பிறந்ததினம் இருவாரத்துக்கு முன்னர் தாயகத்தில் மாணவ,மாணவிகள் பெற்றோர்கள் சார்பில் இனிதாக கொண்டாடப்பட்டது.
இதேவேளை அன்றையதினம் சுவிஸில் உள்ள தனது வாசல்ஸ்தலத்தில் செல்வி.இனயா தனது முதலாவது பிறந்த தினத்தை அன்பு பெற்றோரான பிரசன்னா, திவாநந்தி மற்றும் சித்தப்பா சித்தியான சாரூசன், சங்கீதா, தாத்தா பேரின்பநாதன் மற்றும் உற்றார் உறவினர்களுடன் கொண்டாடினார்கள் என்பதும்,
இதேவேளை நாட்டில் ஏற்பட்டுள்ள கடும்மழை, மற்றும் இக்கட்டான பொருளாதார சூழ்நிலையால் மிகவும் கஸ்ரத்துக்கு மத்தியில் வாழும் கிராமங்களை சேர்ந்த மக்களை கணக்கில் கொண்டு வவுனியா ஆசிரியர் சமூகத்தின் வேண்டுகோளை ஏற்று, விசேட அசைவ மதிய உணவு “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” ஏற்பாட்டில் செல்வி. அனயாவின் பெற்றோரின் முழுமையான நிதிப் பங்களிப்பில் நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து மாணவ மாணவிகளுக்கும் வழங்கி வைக்கப்பட்டதும்.
அன்றைய நாளில் பிறந்தநாளைக் கொண்டாடும் செல்வி.இனயா பிரசன்னா அவர்களின் முதலாவது பிறந்தநாளை முன்னிட்டு முதல் நிகழ்வாக அப்பாடசாலை தரம் ஐந்து முதல் பதினொன்று வரை கல்வி பயிலும் மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் ஆர்வமாக கலந்து கொண்டு மிகவும் மகிழ்ச்சியுடன் பிறந்தநாள் பாட்டுப் பாடி கேக் வெட்டி ஒருவருக்கொருவர் ஊட்டி மகிழ்ந்து தத்தமது சந்தோசத்தையும், மகிழ்ச்சினையும் செல்வி.இனயா பிரசன்னா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்தினையும் தெரிவித்தனர். அத்துடன் கலந்து கொண்ட மாணவ,மாணவிகள் அனைவருக்கும் சிற்றுண்டிகளும் வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன் விசேட அசைவ மதிய உணவும், குளிர்பானமும் நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் வழங்கி வைத்தனர் என்பதும் நீங்கள் அறிந்ததே.
இதனைத் தொடர்ந்து இரண்டாவது நிகழ்வாக வவுனியா சமளங்குளம், எல்லப்பர் மருதங்குளம், ஆச்சிபுரம், எல்லப்பர் மருதங்குளம் விவசாய கிராமம், இத்திகுளம், முருகனூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த கோவில்குளம் வவுனியா இந்தக் கல்லூரி, வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம், பெரிய கோமரசன்குளம் மகா வித்தியாலயம், சைவப்பிரகாச மகளிர் கல்லூரி, ஸ்ரீ நாகராஜா வித்தியாலயம், முருகனூர் சாரதா வித்தியாலம் ஆகிய பாடசாலைகளில் “கல்வி பொது தர சாதாரணதர பரீட்சை மற்றும் தரம் 05 புலமைபரிசில் பரீட்சையில் சித்தியடைந்த” மாணவர்களுக்கான கௌரவிப்பு விழா இரண்டாவது நிகழ்வாக நடைபெற்றதும்
இவ்வைபவத்தில் மேற்படி “கல்வி பொது தர சாதாரணதர பரீட்சை மற்றும் தரம் 05 புலமைபரிசில் பரீட்சையில் சித்தியடைந்த” மாணவ,மாணவிகள் அனைவருக்கும் தமது எதிர்கால கல்வித் தேவைக்கான பெறுமதியான பணப்பரிசிலும், வெற்றிக் கேடயங்களும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டதும் நீங்கள் அறிந்ததே.
இதனைத் தொடர்ந்து வவுனியா ஆச்சிபுரம் கழகத்தின் செயற்பாட்டாளரான திருமதி.பிரியங்கா அவர்கள் கழகத்தின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் திரு.சந்திரகுலசிங்கம் மோகன் அவர்கள் ஊடாக முன்வைத்த கோரிக்கையை “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்திடம்” முன்வைத்ததை அடுத்து, பிறந்தநாள் கொண்டாடும் செல்வி.இனயா பிரசன்னா அவர்களின் தாத்தா திரு.பேரின்பநாதன் அவர்களிடம் தெரிவித்ததை அடுத்து செல்வி.இனயா பிரசன்னா அவர்களின் பெற்றோரின் முழுமையான நிதிப் பங்களிப்பில், இன்றையதினம் வவுனியா ஆனந்தபுரம் முருகனூர் ஆதிபராசக்தி அறநெறி பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் கையளிப்பு நிகழ்வு நடைபெற்றதும், அத்துடன் தற்போது பெய்து வரும் கடும் மழையினால் தமது வீட்டுக்கூரையின் நிலையை கருத்தில் கொண்டு முன்வைத்த இரண்டு குடும்பத்தினரின் வேண்டுகோளுக்கு இணங்க தறப்பாள்களும் வழங்கி வைக்கப்பட்டது.
மேற்படி நிகழ்வில் தனது முதலாவது பிறந்ததினத்தைக் கொண்டாடும் செல்வி.இனயா பிரசன்னா அவர்களின் முதலாவது பிறந்தநாளை முன்னிட்டு மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் ஆர்வமாக கலந்து கொண்டு மிகவும் மகிழ்ச்சியுடன் பிறந்தநாள் பாட்டுப் பாடி மகிழ்ந்து தத்தமது சந்தோசத்தையும், மகிழ்ச்சினையும் செல்வி.இனயா பிரசன்னா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்தினையும் தெரிவித்தனர். அத்துடன் கலந்து கொண்ட மாணவ,மாணவிகள் அனைவருக்கும் சிற்றுண்டிகளும் வழங்கி வைக்கப்பட்டது. தொடர்ந்து அவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன் தற்போது பெய்து வரும் கடும் மழையினால் தமது வீட்டுக் கூரையின் நிலையை கருத்தில் கொண்டு முன்வைத்த இரண்டு குடும்பத்தினரின் வேண்டுகோளுக்கு இணங்க தறப்பாள்களும் வழங்கி வைக்கப்பட்டது.
மேற்படி நிகழ்வானது வவுனியா ஆனந்தபுரம் முருகனூர் ஆதிபராசக்தி அறநெறி பாடசாலை மண்டபத்தில் வவுனியா ஆச்சிபுரம் கழகத்தின் செயற்பாட்டாளரான திருமதி.பிரியங்கா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி கட்சி மத்தியகுழு உறுப்பினரும், வவுனியா மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் வவுனியா நகரசபை உப நகர பிதாவுமான திரு.சந்திரகுலசிங்கம் மோகன் பிரதம அதிதியாகவும், ஆலய தலைவர் திரு.சிவா, ஆலய பூசகர் திரு.பெருமாள் ஆச்சிபுரம் மாதர் சங்கத் தலைவி திருமதி சசிகலா ஆகியோர் விருந்தினர்களாகவும் கலந்து கொள்ள, மாணவர்கள் மற்றும் அக்கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பித்தனர்
சுவிஸில் தூண் பிரதேசத்தில் வாழும் பிரசன்னா மற்றும் திவா என அன்புடன் அழைக்கப்படும் திரு.திருமதி. பிரசன்னா திவாநந்தி தம்பதிகளின் செல்வப் புதல்வி செல்வி.இனயா அவர்களின் முதலாவது பிறந்ததினத்தை முன்னிட்டு பெருமளவு நிதிப் பங்களிப்பு வழங்கி, மாணிக்கதாசன் நற்பணி மன்றம் ஊடாக இந்நிகழ்வை மட்டுமல்ல பல்வேறு வாழ்வாதார உதவிகள், கல்விக்கு கரம் கொடுப்போம் போன்ற நிகழ்வுகளை மேற்கொள்ளுமாறு கோரி இருந்தனர்.
இவர்கள் “தமது பெயரோ அன்றில் தம்மை சார்ந்த எந்தவொரு விளம்பரமும் இல்லாமல் இதனை மேற்கொள்ளுமாறு” மாணிக்கதாசன் நற்பணி மன்றத்திடம் கோரிக்கை விடுத்த போதிலும், இவற்றை பகிரங்கத்தில் தெரிவிக்கும் போதே, இவர்களை போன்று பலரும் மக்களுக்கு உதவ முன்வருவார்கள் எனும் ஒரேநோக்கிலேயே இதனை பகிரங்கத்தில் அறிவித்து உள்ளோம்.
இதனைத் தொடர்ந்து தற்போதைய திடீர் விலையேற்றம், பொருளாதார நெருக்கடி போன்ற இன்றைய இக்கட்டான காலத்தின் தேவை கருதி உலருணவுப் பொதிகள் வழங்குதல், பிறிதொரு குடும்பத்தினர் முன்வைத்த கோரிக்கையை ஏற்று அவர்களின் வீட்டு மண்சுவர்களை சீமெந்தினால் கட்டிக் கொடுத்தல், போன்ற பல்வேறு உதவிகள் செல்வி.அனயா பிரசன்னாவின் பிறந்ததினத்தை முன்னிட்டு அவரது பெற்றோரின் முழுமையான நிதிப் பங்களிப்பில் வழங்கப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறாக காலத்தின் தேவை கருதி உடனடியாக இந்த உதவியினை செய்ய முன் வந்த செல்வி.இனயா பிரசன்னா அவர்களின் பெற்றோர்களான திரு.திருமதி.பிரசன்னா திவாநந்தி தம்பதிகளுக்கு மாணவ ஆசிரிய சமூகம் மற்றும் தாயகத்தின் உறவுகளுடன் இணைந்து, மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் நன்றி கூறுவதோடு
இன்றைய நாளில் இனிய முதலாவது பிறந்தநாளைக் கொண்டாடும் “செல்வி.இனயா பிரசன்னா” அவர்கள் தேக ஆரோக்கியத்துடன், கலைகளில், கல்வியில் சிறந்து உயர்வடையவும், சீரிய பண்புகளோடு, நல்ல மனிதமுள்ள புரட்சிப் பெண்ணாக பெற்றோருக்கு பேரும் புகழும் சேர்க்க வேண்டும்” என தாயக உறவுகளோடு, இணைந்து மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் வாயார வாழ்த்தி பெருமை கொள்கிறது..
நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. என்றும்
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.
09.01.2024
சுவிஸ் “செல்வி.இனயாவின்” பிறந்தநாளை முன்னிட்டு “கல்விக்கு கரம் கொடுப்போம்” நிகழ்வு.. (வீடியோ)
சுவிஸ் “செல்வி.இனயா பிரசன்னாவின்” பிறந்தநாள், தாயகத்தில் “விசேட மதியஉணவு” வழங்கி இனிதாகக் கொண்டாட்டம்.. (வீடியோ)
சுவிஸ் “செல்வி.இனயாவின்” பிறந்தநாளை முன்னிட்டு, “கல்வி பொது தர சாதாரணதர பரீட்சை மற்றும் தரம் 05 புலமைபரிசில் பரீட்சையில் சித்தியடைந்த” வவுனியா மாணவர்கள் கௌரவிப்பு.. (வீடியோ)
சுவிஸ் “செல்வி.இனயாவின்” பிறந்தநாளை முன்னிட்டு வவுனியா மாணவர்கள் கௌரவிப்பு.. (படங்கள், வீடியோ)
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1
§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்.. https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos