;
Athirady Tamil News

அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சருக்கு புற்றுநோய்

0

அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் லொயிட் ஒஸ்டின் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்றுள்ளார்.

இதுதொடர்பாக நேற்று வால்டர் ரீட் நஷனல் மிலிட்டரி மெடிக்கல் சென்டர் வெளியிட்ட அறிக்கையில்,

“லொயிட் ஒஸ்டின் உடல்ரீதியாக சில சிக்கல்களை சந்தித்துள்ளார். புத்தாண்டு தினத்தில் இருந்து அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

டிசம்பர் மாத தொடக்கத்தில் புற்றுநோய் கண்டறியப்பட்டது
அவருக்கு டிசம்பர் மாத தொடக்கத்தில் புற்றுநோய் கண்டறியப்பட்டது. டிசம்பர் 22-ம் திகதி புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்க புரோஸ்டேடெக்டோமி என்று அழைக்கப்படும் “அறுவை சிகிச்சை முறைக்கு” அவர் உட்படுத்தப்பட்டார்.

உடல்நிலை தற்போது சிறப்பாக உள்ளது
இந்த செயல்முறையின் போது அவருக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டது. ஒஸ்டின் தனது அறுவை சிகிச்சையில் இருந்து சீராக குணமடைந்து மறுநாள் காலை வீடு திரும்பினார்.

அவரது புரோஸ்டேட் புற்றுநோய் முன்கூட்டியே கண்டறியப்பட்டது, மேலும் அவரது உடல்நிலை தற்போது சிறப்பாக உள்ளது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.