கருணாநிதியை புகழ்ந்து பேசிய ரஜினிகாந்த், கமல் ஹாசன்.., கொந்தளிக்கும் அதிமுக
கலைஞர் நூற்றாண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன் பேசிய கருத்துக்கு அதிமுக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
செல்லூர் ராஜு பேசியது..
சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, “அண்ணாவுக்கு பிறகு திமுகவில் யார் முதலமைச்சராக வர வேண்டும் என்ற பிரச்சனை வந்த நேரத்தில் எம்.ஜி.ஆர் தான் கருணாநிதியை முதலமைச்சராக தேர்வு செய்தார்.
தான் முதலமைச்சர் ஆவதற்கு எம்.ஜி.ஆர் தான் காரணம் என்று கருணாநிதியே திரைப்பட விழாவில் கூறியிருக்கிறார். ஆனால், கலைஞர் நூற்றாண்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் ஏதோ கருணாநிதியை புகழ வேண்டும் என்பதற்காக வரலாற்றை மறைத்து பேசியுள்ளார். அது வருத்தம் அளிக்கிறது” என்றார்.
ஜெயக்குமார் பேசியது..
செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “கலைஞர் நூற்றாண்டு விழாவில் 50,000 இருக்கைகள் போடப்பட்டன. ஆனால், 899 பேர் தான் விழாவுக்கு வந்தனர். இதை விட கருணாநிதியை கேவலப்படுத்தியது வேறொன்றும் இல்லை.
அப்போது விழாவில் நடிகர் ரஜினிகாந்தும், கமல் ஹாசனும் எழுதிக்கொடுத்த உரையை அப்படியே படித்தனர். கருணாநிதியால் தான் எம்.ஜி,ஆர் உயர்ந்தார் என்று கூறுகின்றனர். அதனை தமிழ்நாடு ஏற்குமா? திமுக.வில் எம்.ஜி.ஆர் இருக்கும் வரை கருணாநிதி பதவியில் இருந்தார்” என்று பேசினார்.