;
Athirady Tamil News

குளிருக்காக நிலக்கரியை வைத்து நெருப்பு மூட்டிய குடும்பம்.., கடைசியில் நேர்ந்த துயரம்

0

குளிருக்காக நெருப்பு மூட்டி தூங்க சென்ற 7 பேரில் 5 பேர் சடலமாக மீட்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

5 பேர் உயிரிழப்பு
இந்திய மாநிலமான உத்தரப்பிரதேசம், அம்ரோஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரஹீசுதின். இவருக்கு சொந்தமான வீட்டில், அவரது மனைவி, 3 பிள்ளைகள், உறவினர்களின் பிள்ளைகள் 2 பேர் மற்றும் கணவரின் சகோதரர் ஆகியோர் கடந்த 8 -ம் திகதி தூங்க சென்றனர்.

ஆனால், இவர்கள் 9 -ம் திகதி மாலை வரை வீட்டை விட்டு வெளியில் வரவில்லை. இதனால், சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, ரஹீசுதினின் பிள்ளைகள் 3 பேர், உறவினரின் பிள்ளைகள் 2 பேர் என மொத்தம் 5 பேரும் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளனர்.

மேலும், ரஹீசுதினின் மனைவி மற்றும் அவரது சகோதரர் மயக்க நிலையில் கிடந்துள்ளனர். இவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

நிலக்கரியால் ஏற்பட்ட சோகம்
இதனைத்தொடர்ந்து, தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் குன்வர் அனுபம் சிங் உள்ளிட்ட பொலிஸார் மற்றும் நிர்வாக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையை தொடங்கினர்.

அதன் படி, வீட்டில் உறங்க சென்ற குடும்பத்தினர் குளிருக்கு இதமாக இருப்பதற்காக நிலக்கரியை வைத்து நெருப்பு மூட்டியுள்ளனர். அப்போது வீட்டின் கதவுகள், ஜன்னல்கள் மூடப்பட்டு இருந்துள்ளது. இதனால், புகை வெளியேற முடியாமல் வீட்டை சூழ்ந்துள்ளது.

அப்போது ஆக்சிஜன் அளவு குறைந்துள்ளதால் வீட்டில் உள்ள அனைவரும் மயக்க நிலைக்கு சென்றுள்ளனர். இது பல மணி நேரம் நீடித்ததால் சோனம் (19), வாரிஸ் (17), மெஹக் (16), ஜைத் (15) மற்றும் மஹிர் (12) ஆகிய 5 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நிலக்கரியை எரித்தால் கார்பன் – டை – ஆக்சைடு மற்றும் கார்பன் மோனாக்சைடு போன்ற ஆபத்தான வாயுக்களை வெளியேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.