கோதுமை மா விலை அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவித்தல்
சர்வதேச அளவில் வர்த்தகம் தடைபட்டாலும் கோதுமை மாவின் விலையில் எந்த மாற்றமும் நடைபெறாது என நாட்டின் முன்னணி கோதுமை மா வழங்குநர்களான செரண்டிப் மற்றும் ப்ரிமா ஆகிய நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
ஆறு மாதங்களுக்கு போதுமான கோதுமை தானியங்களை கிடங்குகளில் பாதுகாத்துள்ளதாகவும் இதனால் அதிக விலை திருத்தங்கள் இல்லாமல் ஸ்திரத்தன்மையை உறுதி செய்துள்ளதாகவும் குறித்த நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
செங்கடல் பதற்றம்
செங்கடல் பதற்றம் காரணமாக எதிர்காலத்தில் கப்பல் பயணங்களுக்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் நிலையில் கோதுமை மாவின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்படும் என இறக்குமதியாளர்கள் தெரிவித்திருந்தனர்.
இருப்பினும், உள்நாட்டு சந்தையில் பெரும்பாலான விநியோகத்தை வழங்கும் இரு நிறுவனங்களும், சமீபத்திய நெருக்கடியின் போதும் கோதுமை தானியங்கள் மற்றும் கோதுமை மாவை போதுமான அளவு கையிருப்பு வைத்திருப்பதாக தெரிவித்துள்ளன.
இதனால் கோதுமைமாவின் விலை ஏற்றம் தொடர்பில் அச்சம் கொள்ள தேவையில்லை என இரு நிறுவனங்களும் சுட்டிக்காட்டியுள்ளன.