இஸ்ரேலில் ஆண்டுதோறும் வீணாகும் உணவு பொருட்கள்: வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்
இஸ்ரேலில் ஆண்டுதோறும் ரூ.51,740 கோடி மதிப்பிலான உணவு பொருட்கள் வீணடிக்கப்படுகின்றது என இஸ்ரேல் நாட்டின் சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதனால், 14 லட்சம் மக்கள் உணவு பாதுகாப்பற்ற நிலையில் வசித்து வருகின்றனர் என அந்த அறிக்கை மேலும், தெரிவித்துள்ளது.
இஸ்ரேலில் காணப்படும் உணவு பாதுகாப்பற்ற சூழலால் கடந்த 2022-ம் ஆண்டில் சுகாதாரத்திற்கு கூடுதலாக ரூ.11,645 கோடி செலவிடப்பட்டுள்ளதாக அறிக்கை கூறுகின்றது.இது அந்நாட்டின் தேசிய சுகாதார செலவினத்தில் 5 சதவீதமாகும்.
இஸ்ரேலில் வீணடிக்கப்படும் உணவு பொருட்கள்
அந்த அறிக்கையின்படி, 2022-ம் ஆண்டில் 26 லட்சம் டன் அளவிலான உணவு பொருட்கள் இஸ்ரேலில் வீணாக தூக்கி எறியப்பட்டு உள்ளன.
இதன் தொடர்ச்சியாக, சுற்றுச்சூழலுக்கு ஆன செலவினம் ஆண்டுதோறும் ரூ.8,734 கோடி என மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது.
இதனால், 6 சதவீதம் அளவுக்கு பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றமும் நடைபெறுகிறது. உணவு வீணாவதில் இருந்து தடுக்கப்பட்டு அதன் செலவினம் குறையும்போது, எரிசக்தி, நீர் மற்றும் நிலம் ஆகியவற்றின் பல்வேறு வளங்கள் பாதுகாக்கப்படும் சாத்தியம் ஏற்படும்.
இஸ்ரேல் ஹமாஸ் போர்
இஸ்ரேல் ஹமாஸ் போரால் இஸ்ரேலை சேர்ந்த லட்சக்கணக்கான குடும்பங்கள் அவர்களுடைய வீடுகளை காலி செய்து விட்டு வேறு இடங்களுக்கு புலம்பெயர்ந்துள்ளதால் இது, இஸ்ரேலின் பொருளாதார பாதிப்புக்கான காரணங்களில் ஒன்றாக உள்ளது.
இதனால், உணவு தேவையாக உள்ள மக்கள் இடையே உணவு பாதுகாப்பின்மையை என்பது மிகவும் மோசமான நிலை என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.