;
Athirady Tamil News

பிரித்தானியாவில் தன்னை நாடிவந்த 5 பெண் நோயாளிகள் மீது அத்துமீறிய மருத்துவர்: வெளிவரும் பின்னணி

0

குடும்ப நல மருத்துவர் ஒருவர் தம்மை நாடிவந்த 5 பெண் நோயாளிகள் மீது அத்துமீறியுள்ள சம்பவம் தற்போது நீதிமன்ற விசாரணைக்கு வந்துள்ளது.

முகம் சுளிக்கும் வகையில்
பிரித்தானியாவின் emsworth பகுதியில் குடியிருக்கும் மருத்துவர் மோகன் பாபு என்பவரே பெண் நோயாளிகளிடம் முகம் சுளிக்கும் வகையில் நடந்து கொண்டுள்ளதுடன் அத்துமீறவும் செய்துள்ளார்.

மோகன் பாபு பணியாற்றும் அதே மருத்துவமனையில் தான் அவரது மனைவியும் மருத்துவராக உள்ளார். 47 வயதான மோகன் பாபு கணைய புற்றுநோய் கொண்ட நோயாளி ஒருவரிடம் மேலாடையை விலக்கவும் கட்டாயப்படுத்தியுள்ளார்.

மட்டுமின்றி சிங்கத்தின் பசியுடன் இருப்பதாகவும், தின்றுவிடவா என்றும் அந்த பெண் நோயாளியிடம் மோகன் பாபு கேட்டுள்ளார். Havant பகுதியில் உள்ள மருத்துவமனையில் இவர் பணியாற்றிய 2019 ஜூன் முதல் 2021 ஜூலை வரையில் இந்த தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளதாகவும்,

அதில் 5 பெண்கள் காவல்துறையை நாடியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் மேலும் 5 பெண்கள் மருத்துவர் மோகன் பாபு தொடர்பில் புகார் அளித்திருந்தாலும், குற்றவியல் நடவடிக்கை ஏதும் முன்னெடுக்கப்படவில்லை என்றே கூறப்படுகிறது.

மனைவியின் பரிந்துரை
ஒரே மருத்துவமனையில் மோகன் பாபுவால் அத்துமீறப்பட்ட 9 பெண்கள் மற்றும் இவர் முன்னர் பணியாற்றிய மருத்துவமனையில் ஒரு பெண் என இவருக்கு எதிராக புகாரளித்துள்ளதாக சட்டத்தரணி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மருத்துவத்துறையில் 20 ஆண்டுகள் அனுபவம் கொண்ட மோகன் பாபு 2018 ஏப்ரல் முதல் Staunton மருத்துவமனையில் பணிக்கு சேர்ந்துள்ளார். இவரது மனைவியின் பரிந்துரையின் காரணமாகவே அந்த மருத்துவமனையில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் நான்கு மாதங்களிலேயே இவர் மீது முதல் புகார் பதிவாகியுள்ளது. 2020 பிப்ரவரி மாதம் 19 வயதான இளம்பெண் ஒருவர் இவரது சிகிச்சையை நாடிச்செல்ல, அவரிடமும் மோகன் பாபு அத்துமீற முயன்றுள்ளார்.

சுதாரித்துக்கொண்டு அவர் வெளியேற, இறுதியில் கன்னத்தில் முத்தம் வைத்துள்ளதாக புகாரில் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் பொலிஸ் விசாரணை நிமித்தம் 2021 ஜூலை மாதத்தில் இருந்து Staunton மருத்துவமனையில் வேலைக்கு செல்வதை மோகன் பாபு நிறுத்தியுள்ளார்.

ஆனால் தம் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் மருத்துவர் மோகன் பாபு மறுத்துள்ளார் என்றே கூறப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.