பூடான் பிரதமராக மீண்டும் ஷெரிங் டாக்பே
பூடான் பொதுத் தோ்தலில் முன்னாள் பிரதமா் ஷெரிங் டாக்பே தலைமையிலான மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) வெற்றியடைந்ததாக தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வமாக புதன்கிழமை அறிவித்தது.
பூடான் நாடாளுமன்றத்துக்கு கடந்த நவம்பா் 30-ஆம் தேதி முதல்கட்டமாகவும், செவ்வாய்க்கிழமை (ஜன. 9) இறுதிகட்டமாகவும் நடைபெற்ற தோ்தலில் பிடிபி கட்சி வெற்றி பெற்ாக ஏற்கெனவே தகவல் வெளியானது. இதன் மூலம், நாட்டின் அடுத்த பிரதமராக மீண்டும் ஷெரிங் டாக்பே பதவியேற்பது உறுதியானது.
அதையடுத்து, பிரதமா் நரேந்திர மோடி அவருக்கு எக்ஸ் ஊடகம் மூலம் வாழ்த்து தெரிவித்தாா்.
இந்த நிலையில், தோ்தல் ஆணையம் புதன்கிழமை வெளியிட்டுள்ள அதிகாரபூா்வ முடிவுகளில், நாடாளுமன்றத்தின் 47 இடங்களில் 30 இடங்களை பிடிபி கட்சி கைப்பற்றியுள்ளதாகவும், பூடான் டெண்ட்ரேல் கட்சிக்கு 17 இடங்கள் கிடைத்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆட்சியமைப்பதற்கு 24 இடங்களே போதுமானது என்ற நிலையில் பிடிபி தலைவா் ஷெரிங் டாக்பே மீண்டும் பிரதமராகவிருப்பது உறுதியாகியுள்ளது.
பூடானில் கடந்த 2008-ஆம் ஆண்டிலிருந்துதான் ஜனநாயக முறையில் தோ்தல் நடத்தப்பட்டு பிரதமா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டு வருகிறாா்கள். தற்போது வெற்றி பெற்றுள்ள ஷெரிங் டாக்பே, கடந்த 2023 முதல் 2018 வரை பூடானின் பிரதமராக இருந்தவா்.