இஸ்ரேல் இனப்படுகொலையாளரா? தொடங்கும் சட்டப் போர்!
இஸ்ரேல், காஸாவில் நடத்திவரும் தாக்குதலை இனப்படுகொலை என அறிவிக்கவும் உடனடி போர் நிறுத்தத்தையும் கோரி தொடரப்பட்ட வழக்கு, ஐக்கிய நாடுகள் அவையின் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
வழக்கு ஆரம்பிக்கும் நாள்களில் தென்னாப்பிரிக்காவின் வாதத்தை, நீதிபதிகள் கேட்கவுள்ளனர்.
இஸ்ரேல்- இனப்படுகொலையாளர் என்கிற குற்றச்சாட்டைத் தொடர்ந்து மறுத்துவருகிறது. ஐக்கிய நாடுகள் அவையும் பன்னாட்டு அமைப்புகளும் ஒருசார்பாகச் செயல்படுவதாக குற்றம் சாட்டும் இஸ்ரேல், இந்த வழக்கில் தங்கள் நாட்டுக்குச் சார்பாக வாதிட வலுவான சட்டக் குழுவை அனுப்பியுள்ளது.
முதல்கட்ட வாதத்தில் இஸ்ரேலின் போர் நடவடிக்கைகள் ஏன் இனப்படுகொலைக்கான கூறுகளைக் கொண்டிருக்கிறது என தென்னாப்பிரிக்கா வாதிடவுள்ளது.
மேலும், இந்த வழக்கு தொடங்கும் வியாழக்கிழமை தென்னாப்பிரிக்காவின் கோரிக்கையான இஸ்ரேலின் போர் நடவடிக்கைகளுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதிக்க வேண்டி விடுத்துள்ள கோரிக்கை கவனத்தில் கொள்ளப்படவுள்ளது. இதில் முடிவு எடுக்க நீதிமன்றத்துக்கு வாரங்கள் எடுக்கலாம்.
காஸாவில் நடைபெற்று வரும் இஸ்ரேலின் தாக்குதலில் பலியான பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.