கொழும்பு பெண் கொலை சந்தேக நபர் பகீர் வாக்குமூலம்
கொழும்பு – கஹதுடுவைக்கு அருகில் இளம் குடும்ப பெண் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரப்ரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் பெண்ணின் கொலைக்கு தகாத உறவே காரணம் என சந்தேக நபர வாக்குமூலம் அளைத்துள்ளதாக பொலிஸார் கூறொயுள்ளனர்.
பெண் கொலை குற்றச்சாட்டின் பேரில் வெளிநாடுகளில் இயங்கி வரும் பெரும் போதைப்பொருள் கடத்தல்காரரின் சகோதரர், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
47 வயதான எல்லாவல லியனகே டன்ஸ்டன் பிரசாத் பெரேரா, பாதிக்கப்பட்ட பெண்ணின் காதலன் ஆகியோர், செவ்வாய்க்கிழமை இரவு நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயன்றபோது, விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.
41 வயதான சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் ஊழியர் ஒருவர், செவ்வாய்க்கிழமை மாலை கஹதுடுவ இடைமாற்றுக்கு அருகில் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார். சம்பவம் தொடபில் கைதான சந்தேகநபரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது,
இரண்டு வருடங்களுக்கு முன்னர் தனது மனைவி நான்கு பிள்ளைகளையும் அவரையும் வேறொரு நபருடன் விட்டுச் சென்றதாக விசாரணை அதிகாரிகளிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
சந்தேக நபர் வாக்குமூலம்
அதன் பின்னர், அவர் பாதிக்கப்பட்ட பெண்ணுடன் சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர் நெருங்கிய உறவைப் பேணி வந்ததாகவும், கூறப்படுகிறது.
விசாரணைகளின்படி, அவர் கொலை செய்யப்பட்ட நாள் காலை முதல் அவருடன் தொலைபேசியில் வாக்குவாதம் செய்துள்ளார். சந்தேக நபர் கொழும்பில் விசா ஆலோசனை அலுவலகம் ஒன்றையும் கட்டிட நிர்மாண நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழமை போன்று செவ்வாய்கிழமை மதியம் அவளை அழைத்துச் செல்லச் சென்ற போதும், அவர் தன்னுடன் வர மறுத்து முச்சக்கர வண்டியில் செல்ல முற்பட்டதால் ஆத்திரம் காரணமாக தனது காரில் இருந்த கூரிய ஆயுதத்தை எடுத்து கழுத்தை அறுத்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
எனினும் அவளைக் கொல்லும் நோக்கத்தில் தான் தாக்கவில்லை என்றும், பின்னர் அவர் இறந்துவிட்டதாகத் தெரிய வந்ததாகவும், பின்னர் வெளிநாடு செல்வதற்காக விமான நிலையத்திற்கு வந்ததாகவும் அவர் பொலிஸாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அதேவேளை கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவருக்கு சந்தேகநபர் பல தடவைகள் மிரட்டல் விடுத்துள்ளதாக மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதன் காரணமாக சந்தேகநபருக்கும் குறித்த பெண்ணுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ள நிலையில் சந்தேகநபரின் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு குறித்த பெண் தனது கணவருடன் வெளிநாடு செல்ல திட்டமிட்டுள்ளார்.
இதேவேளை, கொலைச் சம்பவத்திற்காக சந்தேகநபர் வந்த காரை, சந்தேகநபரின் பெக்ககம வீட்டுக்கு முன்பாக நேற்று பிற்பகல் கஹதுடுவ பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
மேலும் கைதான சந்தேக நபர் கெஸ்பேவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.