;
Athirady Tamil News

புத்தரின் மறு அவதாரம் என கூறப்பட்டவர் கைது செய்யப்பட்டதால் பரபரப்பு!

0

புத்தரின் மறு அவதாரம் என அழைக்கப்படும் சர்ச்சைக்குரிய நேபாள மதத்தலைவர் ராம் பஹதுர் போம்ஜன் , பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘குட்டிப் புத்தர்’ என்று அழைக்கப்படும் ராம் பகதூர் போம்ஜன் என்ற மதத்தலைவரே சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த வழக்கில் பல வருடங்களாக தலைமறைவாக இருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராம் பஹதுர் போம்ஜன்
கைதான மதத்தலைவர் ராம் பஹதுர் போம்ஜனுக்கு உலகின் பல்வேறு பகுதிகளில் பக்தர்கள் உள்ளனர். அவர் பல மாதங்களாக தண்ணீர், உணவு இன்றி மரத்தின் அடியில் தியானம் செய்து மக்கள் மத்தியில் புகழ்பெற்றார்.

இதன் காரணமாக 2005 காலக்கட்டத்தில் இவர் தலைப்பு செய்திகளில் இடம் பெற்றார். இதையடுத்து தான் அவருக்கான பக்தர்கள் என்பது அதிகரிக்க தொடங்கியது.

போம்ஜானின் “புத்த பையன்” என்ற பெயர் அவரது புகழுக்கு மேலும் உதவியது, அவர் காட்டில் இருந்தபோது அவரைப் பார்க்க அயல் நாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் பயணம் செய்தனர்.

போம்ஜன் தனது முதல் பிரசங்கத்தின் போது சுமார் 3,000 பேரைக் கவர்ந்ததன் மூலம் சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பிரசங்கம் செய்ய ஆரம்பித்தார் என அவரது இணையதளம் தெரிவிக்கிறது.

பாலியல் துஷ்பிரயோகம்
காத்மண்டுவின் தெற்கே உள்ள பாரா மாவட்டத்தில் உள்ள அவரது ஆசிரமத்தில் சீடராக வசித்து வந்த “இளம் பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கில்” அவருக்கு எதிராக 2020 இல் கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் அவர் தலைமறைவானார்.

இந்நிலையில், நேபாள பொலிஸாரின் மத்திய புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் காத்மண்டுவின் புறநகர்ப் பகுதியில் வீடு ஒன்றில் வசித்து வந்த 34 வயதான குறித்த மதத்தலைவரை கண்காணித்து வந்த நிலையில், அவர் தப்பியோட முயன்ற நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைதானபோது அவரிடமிருந்து ஒரு தொகை கைத்தொலைபேசிகள், ஐந்து மடிக்கணினிகள் மற்றும் டேப்லெட்டுகள் மற்றும் 200,000 அமெரிக்க டொலருக்கும் அதிகமான நேபாளி மற்றும் வெளிநாட்டு நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

ஆசிரமத்தில் இருந்து காணாமல் போன சீடர்கள்
பல்வேறு காலங்களில் போம்ஜானின் ஆசிரமத்தில் இருந்து காணாமல் போன சீடர்கள் குறித்து மேலதிக விசாரணைகள் மற்றும் தேடல்கள் நடத்தப்படுகின்றன” என்று புதன்கிழமை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக கடந்த 2018 ம் ஆண்டில் 18 வயது கன்னியாஸ்திரி ஒருவர் அவர் மீது பலாத்கார புகார் செய்தார். ஆசிரமத்தில் வைத்து தன்னை பலாத்காரம் செய்தாக அவர் ராம் பஹதுர் போம்ஜான் மீது முறைப்பாடு செய்துள்ளார்.

இதையடுத்து போலீசார் அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து கட்டுக்கட்டாக நோபாள நாட்டின் பணம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் , தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறதாகவும் அந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.