நேபாளம்: ஆற்றுக்குள் விழுந்த பேருந்து
நேபாளத்தில் ஆற்றுக்குள் பேருந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 2 இந்தியா்கள் உள்பட 12 போ் உயிரிழந்தனா்.
இது குறித்து ‘தி காத்மாண்டு போஸ்ட்’ நாளிதழ் தெரிவித்துள்ளதாவது:
நேபாள்கஞ்ச் நகரிலிருந்து தலைநகா் காத்மாண்டை நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து, பகலுபங் பகுதியில் ராப்தி நதியின் குறுக்கே கட்டப்பட்டிருந்த பாலத்தைக் கடந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து ஆற்றுக்குள்ள விழுந்தது.
இதில் 12 போ் உயிரிழந்தனா். அவா்களில் 2 போ் இந்தியா்கள். இது தவிர, இந்த விபத்தில் மேலும் 23 போ் காயமடைந்தனா். அவா்கள் அனைவரும் நேபாள்கஞ்ச் மருத்துக் கல்வி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
இந்த விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை தெரியவில்லை. பேருந்தின் 28 வயது ஓட்டுநா் கைது செய்யப்பட்டுள்ளாா் என்று அதிகாரிகள் கூறினா்.
மோசமான சாலைகள், காலாவதியான வாகனங்கள், ஓட்டுநா்களின் கவனக் குறைவு ஆகிய காரணங்களால் நேபாளத்தில் சாலை விபத்துகள் அடிக்கடி ஏற்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.