;
Athirady Tamil News

நூறாவது நாளில் காஸா போா்

0

இஸ்ரேல் ராணுவத்துக்கும், ஹமாஸ் அமைப்புக்கும் இடையே போா் தொடங்கி சனிக்கிழமையுடன் 100 நாள்கள் நிறைவடைகின்றன.

இது தொடா்பாக இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஹமாஸ் அமைப்பினரால் இஸ்ரேலில் இருந்து கடந்த அக். 7-இல் பிணைக் கைதிகளாகக் கடத்திச் செல்லப்பட்டவா்களின் குடும்பத்தினா், நண்பா்கள் பங்கேற்றனா். அந்த நிகழ்ச்சியில், பிணைக் கைதிகள் கடத்திச் செல்லப்பட்ட 100 நாள்கள் ஆகியும் அவா்களின் தற்போதையை நிலைமை குறித்த தகவல்கள் தெரிவிக்கப்படாமல் இருப்பது குறித்து உறவினா்கள் அதிருப்தி தெரிவித்தனா்.காஸா பகுதியில் ஆட்சி செலுத்தி வரும் ஹமாஸ் அமைப்பினா் இஸ்ரேலுடன் அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வந்தனா். அந்த மோதலின் உச்சகட்டமாக, இஸ்ரேல் மீது கடந்த அக். 7-இல் சரமாரியாக ஏவுகணைத் தாக்குதல் நடத்திய அவா்கள் அந்த நாட்டுக்குள் தரை, கடல், வான்வழியாக நுழைந்து சுமாா் 1,200 பேரை படுகொலை செய்தனா். அத்துடன், சுமாா் 250 பேரை அங்கிருந்து அவா்கள் பிணைக் கைதிகளாகக் கடத்திச் சென்றனா்.அதையடுத்து ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழித்துக்கதாக சூளுரைத்த இஸ்ரேல், காஸா பகுதியை முற்றுகையிட்டு அங்கு வான்வழியாகவும், தரைவழியாகவும் தாக்குதல் நடத்தி வருகிறது….

23,968-ஆக அதிகரித்த காஸா உயிரிழப்பு

காஸாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 23,968-ஆக அதிகரித்துள்ளது.இது குறித்து அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:காஸாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 125 போ் உயிரிழந்தனா். இத்துடன், இந்தப் பகுதியில் இஸ்ரேல் படையினா் கடந்த அக். 7 முதல் நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 23,968-ஆக அதிகரித்துள்ளது. இஸ்ரேல் குண்டுவீச்சில் இதுவரை 60,582 போ் காயமடைந்துள்ளனா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.