;
Athirady Tamil News

மாதவிடாய் வலியால் அவதிப்படுகிறீர்களா? இந்த உணவுகள் தீர்வு கொடுக்கும்

0

பொதுவாகவே பெண்கள் மாதவிடாய் காலத்தில் மிகவும் சோர்வாக உணர்வார்கள். மாதவிடாயின் போது உடலில் ஏற்படும் ஹேர்மோன் மாற்றங்களே இதற்கு முக்கிய காரணமாக அமைகின்றது.

இந்த நேரத்தில் பெண்களுக்கு மன அழுத்தம் அதிகரிப்பதாகவும் வைத்தியர்கள் குறிப்பிடுகின்றனர்.இந்த காலத்தில் பெண்களுக்கு உணவின் மீது நாட்டம் குறைவாகவே இருக்கும்.

ஆனால் மாதவிடாய் காலத்தில் தான் பெண்கள் ஆரோக்கியமான உணவுகளைச் உட்கொள்ள வேண்டும். ஒவ்வொரு பெண்ணின் மாதவிடாய் சுழற்சியும், உடல் அமைப்பு மற்றும் மாதவிடாய் கால வலிகளும் மாறுபடக்கூடும்.

தீர்வு தரும் உணவுகள்
மாதவிடாயின் போது தினசரி இரண்டு அல்லது மூன்று பழங்களை உட்கொண்டு வருவதனால் உடலுக்கு புத்துணர்ச்சி மற்றும் நீரேற்றத்தை வழங்குகின்றது.

அதுமட்டுமின்றி மனநிலை மாற்றத்தை சீராக வைத்துக்கொள்ளவும் இது துணைப்புரிகின்றது. மெக்னீசியம் மற்றும் வைட்டமின்-கே போன்ற ஊட்டச்சத்துக்களானது பச்சை காய்கறிகள் மற்றும் கீரைகளில் அதிகமுள்ளதால் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலியைக் குறைக்க உதவும்.

ஒரு நாளைக்கு 2 முறை சூடான இஞ்சி டீயை குடித்து வருவதனால் வலி மிகுந்த வயிற்றுத் தசைப்பிடிப்புகளைக் குறைக்க உதவும். அதுமட்டுமின்றி குமட்டல் மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வளிக்கும்.

பருப்புகள் மற்றும் பீன்ஸ் வகைகளை மாதவிடாய் சமயத்தில் எடுத்துக் கொள்வதனால் அச்சமயத்தில் ஏற்படும் இரத்த இழப்பானது புரதம் மற்றும் இரும்புச்சத்துக்கள் நிறைந்த இவை மூலம் ஈடு செய்யப்படும்.

அதிக அளவில் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் உள்ள மஞ்சளை பயன்படுத்துவதனால் கெட்ட பாக்டீரியாக்களை அழிப்பது மட்டுமின்றி வயிற்று வழியை போக்கக்கூடும். மேலும் அந்தரகப் பகுதியில் ஏற்படும் துர்நாற்றத்தைப் போக்க உதவும்.

டார்க் சாக்லெட் சாப்பிடுவதினால் இதில் அடங்கியுள்ள இரும்புச் சத்து மற்றும் மெக்னீசியம் மன அழுத்தத்தை குறைக்க உதவும். மாதவிடாய் காலத்தில் வழக்கத்தை விட உடல் சூடு கொஞ்சம் அதிகமாகவே இருக்கும்.

இந்த சமயத்தில் தயிர், மோர் போன்ற உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்வதனால் உடம்பை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள முடியும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.