துரத்தி அடிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட தகவல் திணைக்கள அதிகாரி
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கும் ஊடகவியலார்களுக்கும் இடையிலான முரண்பாடானது வலுப்பெற்றதை தொடர்ந்து மாவட்ட செயலக தகவல் திணைக்கள அதிகாரி ஜீவானந்தம் இன்று போராட்டக்காரர்களால் துரத்தி அடிக்கப்பட்டுள்ளார்.
தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பண்ணையாளர்கள் தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் மாவட்ட அரசாங்க அதிபரிடம் கேள்வி எழுப்பிய போது எனக்கு போராட்டக்காரர் தொடர்பான எந்த தகவலும் இவர்கள் வழங்கவில்லை என தெரிவித்த நிலையில் அந்த இடத்தில் தரித்து நின்ற மாவட்ட தகவல் திணைகளை அதிகாரி நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனுடன் முரண்பட்டதை அடுத்து குறித்த இடத்தில் இருந்து அகற்றப்பட்டுள்ளார்.
அபிவிருத்தி தொடர்பான கூட்டங்கள்
தொடர்ச்சியாக மட்டக்களப்பு மாவட்ட செயலக தகவல் திணைக்களம் ஒரு கட்சி காரியாயமாக இயங்கி வருகின்ற நிலையில் மாவட்டத்தில் முழு நேரமாக பணி புரியும் ஊடகவியலாளர்களுக்கு தகவல்களை வழங்காமல் அவர்களே செய்திகளை அனுப்புகின்ற நடவடிக்கையும் கடந்த காலங்களில் இருந்து இடம்பெற்று வருகின்றது.
மாவட்டத்தில் நடக்கும் அரசாங்கத்தின் முக்கியமான அபிவிருத்தி தொடர்பான கூட்டங்களுக்கு ஊடகவியலாளருக்கு அழைப்பு விடாமல் மட்டக்களப்பு மாவட்ட இராஜாங்க அமைச்சரின் வேண்டுகோளுக்கமைய செயற்படும் மட்டக்களப்பு மாவட்ட தகவல் திணைக்கள அதிகாரி தொடர்பாக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னதாக நாடாளுமன்றத்திலும் பேசப்பட்டிருந்தது.
இன்றைய தினமும் மாவட்ட அரசாங்க அதிபருக்கு பிழையான தகவல்களை வழங்குவதாக மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்து இருந்த நிலையில் அவர் அங்கிருந்து துரத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.