;
Athirady Tamil News

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி விலகல்: அவரின் ஆதரவு யாருக்கு?

0

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் போட்டியில் இருந்து இந்திய வம்சாவளி தொழிலதிபர் விவேக் ராமசாமி விலகுவதாக தெரிவித்துள்ளார்.

விவேக் ராமசாமி விலகல்
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் நிலையில், இந்த தேர்தலில் குடியரசுக் கட்சியின்(Republican party) ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட இந்திய-அமெரிக்க தொழிலதிபர் விவேக் ராமசாமி(Vivek Ramaswamy) விருப்பம் தெரிவித்து கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரியில் வேட்புமனு வெளியிட்டு இருந்தார்.

இதற்காக குடியரசு கட்சியினர் மத்தியில் தொடர்ந்து சந்திப்புகள் மற்றும் சமூக ஊடக முகாம்களை விவேக் ராமசாமி நடத்தி வந்தார்.

இந்நிலையில் அயோவாவில்(Iowa) நடைபெற்ற குடியரசு கட்சியின் உள் வாக்கெடுப்பின் ஆரம்ப முடிவில் விவேக் ராமசாமி நான்காவது இடத்தை பிடித்தார்.

இதனை தொடர்ந்து விவேக் ராமசாமி அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் போட்டியில் இருந்து விலகி இருப்பதாக அறிவித்துள்ளார்.

டிரம்புக்கு ஆதரவு
ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் போட்டியில் இருந்து விலகுவதாக விவேக் ராமசாமி அறிவித்ததுடன் மட்டுமல்லாமல், வரும் ஜனாதிபதி தேர்தலில் டொனால்டு டிரம்ப்-க்கு தனது முழு ஆதரவை வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் ” அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் தேர்வாவதை உறுதி செய்ய தொடர்ந்து உழைப்போம் என்றும் விவேக் ராமசாமி தெரிவித்துள்ளார்.

அத்துடன் 21ம் நூற்றாண்டின் சிறந்த ஜனாதிபதி டிரம்ப் என்றும், தற்போது டொனால்ட் டிரம்ப் பலம் கூடி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.