உச்சம் தொடும் சிக்கன், முட்டை, வெங்காயத்தின் விலை: திணறும் மக்கள்
பாகிஸ்தானில் பணவீக்கம் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையை விண்ணை தொடும் அளவுக்கு உயர்ந்துள்ளது.
பொருளாதார நெருக்கடி
பாகிஸ்தானில் இதுவரை இல்லாத அளவிற்கு பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ளது.
சர்வதேச செலாவணி நிதியத்துக்கு ஏற்றவாறு நிதி மாற்றங்களின் ஒரு பகுதியாக பாகிஸ்தான் அரசு எடுத்த கடுமையான நடவடிக்கையே நாட்டில் ஏற்பட்ட பணவீக்கத்திற்கு காரணம் என கூறப்படுகிறது.
இதனால் பாகிஸ்தான் இதுவரை கண்டிராத மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது.
சர்வதேச நாணய நிதியம்(IMF) உட்பட பல உதவிகளை பாகிஸ்தான் அரசு பெற்ற போதிலும் நிதி நெருக்கடியை அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை.
சிக்கன், முட்டை, வெங்காயத்தின் விலை
இந்நிலையில் பாகிஸ்தானில் ஒரு கிலோ சிக்கனின் விலை சுமார் ரூ.615க்கு விற்பனை செய்யப்படுகிறது.
முட்டை விலையும், வெங்காயத்தின் விலையும் கூட உச்சத்தை தொட்டுள்ளது, லாகூரில் 12 முட்டைகளின் விலை சுமார் ரூ. 400க்கும், வெங்காயத்தின் விலை ரூ. 230 முதல் ரூ. 250 வரை உயர்ந்துள்ளது.
அத்துடன் மக்களின் அன்றாட தேவைகளுக்கான பால் ஒரு லிட்டர் ரூ.213க்கும், அரிசி ரூ.328க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதே நேரம் ஒரு கிலோ தக்காளியின் விலை சுமார் ரூ, 200க்கு விற்கப்படுகிறது.