நயினாதீவு அம்மன் ஆலய மகா கும்பாபிஷேக கிரியைகள் ஆரம்பம்
வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் எதிர்வரும் 24ஆம் திகதி புதன்கிழமை இடம்பெறவுள்ளது.
பிரதிஷ்டா கிரியைகள் இன்றைய தினம் புதன்கிழமை ஆரம்பமானது. தொடர்ந்து வரும் நாட்களில் கிரியைகள் இடம்பெற்று , எதிர்வரும் 22ஆம் திகதி திங்கட்கிழமை காலை 07 மணி முதல் , மறுநாள் செவ்வாய்க்கிழமை மாலை 05 மணி வரை அடியவர்கள் எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வுகள் இடம்பெறும்.
அதனை தொடர்ந்து மறுநாள் 24ஆம் திகதி புதன்கிழமை காலை 09.38 மணி முதல் 11.20 மணி வரையிலான சுப நேரத்தில் மகா கும்பாபிஷேகம் நடைபெறும்.