லிட்ரோ பங்குகளை விற்பனை செய்ய அரசாங்கம் தீர்மானம்
லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட் மற்றும் லிட்ரோ கேஸ் டெர்மினல் லங்கா (பிரைவேட்) நிறுவனங்களின் முழு பங்கு அல்லது பெரும்பான்மை பங்குகளை விற்பனை செய்வதற்கான விண்ணப்பங்களை வெளியிட அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட் நிறுவனத்தின் 99.936% பங்குகளையும், லிட்ரோ கேஸ் டெர்மினல் லங்கா நிறுவனத்தின் 100% பங்குகளையும் இலங்கை அரசாங்கம் கொண்டுள்ளது.
இரண்டு கட்ட ஏல நடைமறை
அரசுக்குச் சொந்தமான நிறுவன மறுசீரமைப்புப் பிரிவின்படி, டெலாய்ட் டச் டோமட்சு இந்தியா LLP (DTTILLP) பரிவர்த்தனை ஆலோசகராகப் பணியாற்றுவதன் மூலம், இரண்டு கட்ட போட்டி ஏலச் செயல்முறையின் மூலம் விநியோகம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஆகவே, ஆர்வமுள்ள அனைத்து தரப்பினரும் பின்வரும் இணையதளத்தில் இருந்து விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம் என அரசாங்கம் அறிவித்துள்ளது.